Type Here to Get Search Results !

18 ஜூன் 2020 - வியாழன் தினசரி நடப்பு நிகழ்வுகள்

0
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்


1.இந்திய அமைதியை விரும்பும் நாடு ஆனால் எங்களிடம் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் அதற்கான திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று சீனாவை பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.


2.கரோனா நோய் தொற்றை எதிர்கொள்ளவும் முடங்கியுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்கவும் ரூபாய் 5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.




3. முதல்வர் அலுவலக முதுநிலை தனிச்செயலாளர் பி.ஜே.தாமோதரன் காலமானார்.


4.மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு 24 நேரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.


5.தனியார் துறை நிறுவனங்களை இணைத்து வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கில் பிரத்தியோகமாக தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த இணைய தளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அந்த இணைய முகவரி www.tnprivatejobs.tn.gov.in


6.கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு உதவிடும் வகையில் 28 மாநிலங்களுக்கு 15187 கோடியை மத்திய அரசு விதித்தது.


7.கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்தியாவுக்கு சீன தலைநகர் பீஜிங்கில் இயங்கி வரும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) சுமார் ரூபாய் 5714 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.


8.பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 11வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது பெட்ரோல் லிட்டருக்கு 55 காசுகள் வரையும் டீசல் லிட்டருக்கு 60 காசுக்கு வரையும் அதிகரிக்கப்பட்டது.


9.கரோனா தோற்றால் மோசமான பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒருவரின் உயிரை காக்கும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் நிரூபிக்கப்பட்ட டெக்ஸமெத்தாசோன் மருந்தை அந்த நோய்க்கான சிகிச்சை மருந்தாக பிரிட்டன் அரசு அங்கீகரித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்