15 ஜூன் 2020 - திங்கள் தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் வலியுறுத்தல் மூலம் கரோனா குறித்த வதந்திகள் பரவுவதை தடுக்க ஐ.நா நடவடிக்கை எடுத்துள்ளது.


2.சமஸ்கிருதத்தில் உள்ள தமிழக கோயில் பெயர்கள் தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.3.ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இதுவரை ஆறு பாடங்களுடன் இருந்த பிளஸ் 1 பாடத்திட்டம் நிகழ் கல்வியாண்டு முதல் ஐந்து பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.


4.நியாயவிலை கடைகளில் பயோ மெட்ரிக் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் ரேஷன் பொருட்களை வாங்கும்போது குடும்ப அட்டைதாரர்கள் கைரேகையை பதிவு செய்யப்படும்.


5.இந்தியாவில் கரோனா நோய் தொற்று பாதிப்பு நவம்பர் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது எனவும் தீவிர சிகிச்சை பிரிவு ஐசியூ படுக்கைகள் மற்றும் உயிர் காக்கும் சுவாச கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.


6.நேபாளத்தில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய வரை படத்துக்கு ஒப்புதல் பெறும் அரசமைப்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்டது.


7.ஒடிசா மகாநதி ஆற்றில் மூழ்கி இருந்த சுமார் 500 ஆண்டுகளுக்கு பழமையான கோவிலை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கோயிலின் பிரதான கடவுள் கோபிநாதர் ஆவார்.


8.இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.


9.அமெரிக்காவில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அன்மோல் நரங் நாட்டின் புகழ் வாய்ந்த அமெரிக்க ராணுவ அகாடமியில் நான்காண்டு பயிற்சி முடித்தார். இதன் மூலம் இந்த பயிற்சியை முடித்த முதல் சீக்கிய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

2 கருத்துகள்: