Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
11ஆம் வகுப்பு வரலாறு 1010 QUESTIONS ONLINE FREE TEST click here

6th to 12th Tamil [New Book]

6th to 12th New Tamil Book Back Free Online Test
click here

13 ஜூன் 2020 - சனி தினசரி நடப்பு நிகழ்வுகள்


Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்


1.கரோனா தீவிர பரவல் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் சிறப்பு குழுக்கள் மூலம் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து கண்டறியுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியது.


2.கடன் தவணை நிறுத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்திற்கு வட்டி மீது வட்டி வசூலிப்பது தவிர்ப்பது தொடர்பாக மூன்று நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மத்திய நிதி அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.3.பொது முடக்கம் மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என்று எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார். இது போன்ற தவறான செய்திகளை பரப்பி அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.


4. தமிழக சுகாதாரத் துறை செயலாளராக ஜே ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.


5.கரோனா நோய்தொற்று பரவலால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறார்கள் தொழிலாளராக மாறும் சூழல் உருவாகியுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.


6.சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கை தாமாக தாக்கல் செய்வதற்கு விதிக்கப்பட்டு வரும் வட்டி விகிதம் பாதியாக குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


7.வங்கித் துறையில் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதன் தலைமை செயல் அதிகாரிகள் (சி.இ.ஓ) முழு நேர இயக்குனர்களின் வயது உச்சவரம்பை 70 ஆக நிர்ணயிக்கவும். அந்த பணியிடங்களில் ஒருவரை அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டும் பணி அமர்த்தவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.


8.பொது முடக்க காலத்தில் பணியாளர்களுக்கு முழு ஊதியம் வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது ஜூலை மாதம் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


9.விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்களித்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி ரத்தன் லாலுவுக்கு சர்வதேச உணவு விருது வழங்கப்பட்டது.


10.அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக வெள்ளை இனத்தவரின் காலனியாதிக்க சின்னங்கள் கருப்பினத்தவர்கள் அடிமைப்படுத்திய வரலாற்று தலைவர்களுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகின்றன.


11. காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டது. இவற்றின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான குறுவை பாசனம் மற்றும் மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது மின்நிலையம், சுரங்க மின் நிலையம் ஆகியவை மூலம் 250 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.


12.இணையவழி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டது.


13.கொள்ளிடத்தின் குறுக்கே கீழணை பகுதியில் சுமார் ரூபாய் 650 கோடியில் புதிய நீர்வழி அமைப்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்