08 ஜூன் 2020 - திங்கள் தினசரி நடப்பு நிகழ்வுகள்


1. தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


2.சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடன் உதவி திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் இதுவரை 8,320 கோடி கடன் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


3. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. உள்ளூரில் பயங்கரவாதிகள் சேர்வதும், வெகுவாக குறைந்திருக்கிறது. மக்கள் அமைதியை தான் விரும்புகின்றனர் என ஜம்மு காஷ்மீரின் 15 ஆவது படைப் பிரிவு துணைத் தளபதி பிஎஸ் ராஜு கூறினார்.


4.தமிழகத்தின் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூலம் இதுவரை 23.71 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.


5.கடந்த 2019-20 ஆம் நிதி ஆண்டில் மொத்த நேரடி வரி வருவாய் 4.92 சதவீதம் குறைந்து ரூபாய் 12,97,674 கோடியாக உள்ளது. பெருநிறுவனங்கள் வரி குறைக்கப்பட்டது, தனி நபர் வருமான வரி நிரந்தர கழிவு அதிகரிக்கப்பட்டது, ஆகியவை வரி வருவாய் குறைந்ததற்கு காரணம் என்று வருமானத் துறை தெரிவித்துள்ளது.


6.தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள 820 வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிரா வழிபாட்டுத்தலங்கள் திறக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.


7.கரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரேசில் தங்கள் நாட்டின் அதன் நோய்தோற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதை திடீரென நிறுத்தியது.


8.ஹோட்டல் பயன்பாட்டில் மந்தநிலை காரணமாக இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சென்ற மே மாதத்தில் 40 சதவீதம் சரிவடைந்து 7.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.


9.மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் 300 ஆவது நாளாக 100 அடியாக நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

புதியது பழையவை