Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

09 ஜூன் 2020 தினசரி நடப்பு நிகழ்வுகள்

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பார்கள் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பான விசாரணையை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


2.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி புதன்கிழமை தொடங்கப்பட உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 2.77 ஏக்கர் நிலத்துககு உரிமை கோரிய சர்ச்சைக்குரிய வழக்கு
கட்டுமானப் பணிகளை மேற்பார்வை இதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷோத்ர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டார்.


3.ஆவணப் பதிவுகள் இணையத்தில் பதிவு செய்த டோக்கன்களை பயணத்துக்கான இணையவழி அனுமதி சீட்டாக (இ-பாஸ்) பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.


4.குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் பயணத்துக்காக வாங்கப்படும் போயிங் பி777 என்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இரண்டு விமானங்கள் செப்டம்பரில் இந்தியா வந்தடையும் என ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தார்.


5.தெலுங்கானாவில் கரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்தது.


6.நியூசிலாந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் கடைசி நபரும் பூரண குணமடைந்ததால் அந்த தொற்றை ஒழித்துவிட்ட நாடாக நியூசிலாந்து உருவாகி உள்ளது இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


7.பொது முடக்கம் காரணமாக சுமார் இரண்டு மாதகாலம் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதால் உணவுப்பொருள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்கள் ரூபாய் 200 கோடி வர்த்தகத்தை இழந்துள்ளன.


8.ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் நடைபெற்றுவரும் அகழாய்வு பணியில் பழமைவாய்ந்த இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்