05 ஜூன் 2020 - வெள்ளி தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்


1.தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்தது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ₹5,000, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் வரையிலும் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவமனைக்கு வழங்கப்படும்.


2. இந்தியா ஆஸ்திரேலியாவில் உள்ள ராணுவப் படைத்தளங்களை பரஸ்பரம் இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அவற்றில் 7 பாதுகாப்பு ஒப்பந்தம். இணையவழி குற்றம், சுரங்கம், ராணுவ தொழில்நுட்பம், தொழில்நுட்பக்கல்வி, நீர்வழங்கல் மேலாண்மை உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.3.நாடு முழுவதும் கடந்த எட்டு ஆண்டுகளில் 750 புலிகள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்தது. அதிகபட்சமாக மத்தியபிரதேசம் 173 புலிகள் உயிரிழந்தது.


4.கரோனா பொது முடக்க காலத்தில் விசா விதிமுறைகளை மீறி இந்தியாவுக்குள் தங்கியிருந்த வெளிநாடுகளை சேர்ந்த 2550 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதன்மூலம் 10 ஆண்டுகள் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் என்று அமைச்சக அதிகாரிகள் கூறினர்.


5.பெண்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் கடைசி தவணையாக ரூபாய் 500 செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.


6.மேற்கு வங்கத்தில் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி உடன் இணைந்து வீடுகளுக்கே சென்று மதுபானங்களை விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


7.பழம்பெரும் ஹிந்தி திரைப்பட இயக்குனர் பாசு சாட்டர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார்.


8.ஹாங்காங்கில் போலீசார் விதித்திருந்த தடையை மீறி சீனாவில் தியான்மென் சதுக்கம் படுகொலை நினைவு தினக் கூட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை