Type Here to Get Search Results !

maths

1
1. 6-ம் வகுப்பு : பட்டியல் , லாபம் மற்றும் நஷ்டம்

  நஷ்டம்


  ஒரு பொருளை ஒரு விலைக்கு வாங்கி அதனை குறைவான விலைக்கு விற்பதே  நஷ்டம் ஆகும்.

   நட்டம் = அடக்கவிலை _ விற்பனை விலை 

எ. கா :


       ஒரு பழ வணிகர் ஒரு கூடை பழங்களை 500 க்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்களை நசுங்கி விட்டன. மீதம் உள்ள பழங்களை 480 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய நட்டம் காண்க.

தீர்வு : 


        அடக்கவிலை = 500
    
        விற்பனை விலை = 480
  
       நட்டம் = அடக்க விலை _  விற்பனை விலை
  
                      = 500 _ 480
 
                      = 20
               
இவ்வாறு மாணவர்களுக்கு நட்டம் பற்றி கூறி பின்பு அது தொடர்பான கணக்கினை தீர்க்கும் முறையையும் கூறினேன்.
---------------------------------------------------------------------------------------


லாபம்


    ஒரு பொருளை ஒரு விலைக்கு வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்பதே  லாபம் ஆகும்.

   லாபம் = விற்பனை விலை _ அடக்கவிலை

எ. கா : 


      ஒரு மேசையானது 4500 கு வங்கப்பட்டு 4800 கு விற்கப்படுகிறது எனில் லாபம் காண்க.

தீர்வு :


 அடக்கவிலை = 4500

 விற்பனை விலை = 4800

லாபம் = விற்பனை விலை _ அடக்கவிலை

              = 4800 _4500

              = 300

 இதனை தொடர்ந்து மேலும் சில கணக்குகளை தீர்க்கும் முறையை மாணவர்களுக்கு கூறினேன்.
-----------------------------------------------------------------------

2. புள்ளியியல்

9-ம் வகுப்பு:

        சராசரி


சராசரி :


பெரிய அளவிலான தகவல்களை ஒரு குறிப்பிட்ட சிறிய மதிப்பாக சுருக்கி காட்டுவது.

சராசரியின் மூன்று வரையறைகள் :

      ◆ கூட்டு சராசரி
      ◆ இடைநிலை அளவு
      ◆ முகடு

கூட்டு சராசரி :

    
   கூட்டு சராசரி = அனைத்து மதிப்புகளின் கூடுதல் /  உறுப்புகளின் எண்ணிக்கை

ஊக சராசரி :


  சரியான    சராசரி = ஊகசராசரி + வேறுபாடுகளின் சராசரி

சராசரி - வகைப்படுத்த படாத நிகழ்வெண் பரவல் :

       
       கூட்டு சராசரி = அனைத்து உறுப்புகளின் கூடுதல் / உறுப்புகளின் எண்ணிக்கை

சராசரி - வகைப்படுத்த பட்ட நிகழ்வெண் பரவல்  :


         மையப்புள்ளி = UCL.+ LCM / 2

--------------------------------------------------------------

9 - ம் வகுப்பு :

          கூட்டுச் சராசரி


    சராசரி காண  பின்வரும் மூன்று முறைகளை பயன்படுத்தலாம் ,

★ நேரடி முறை

★ ஊகச் சராசரி முறை

★ படிவிலக்க முறை


நேரடி முறை :

      சராசரி =  sum of fx / sum of f
 
இங்கு x என்பது பிரிவு இடைவெளியின் மைய புள்ளி, f என்பது அந்த பிரிவு இடைவெளியின் நிகழ்வெண்.

ஊகச் சராசரி முறை :


             சராசரி =    A + sum of fd /  sum of f

     d என்பது ஒவ்வொரு பிரிவுக்கும் விலக்கம் எனவே  d = x - A

படிவிலக்க முறை :


           சராசரி = A + ( sum of fd / sum of f × c )

 இங்கு  d = x - A / c
---------------------------------------------------------------------

9 - ம் வகுப்பு :

        கூட்டுச் சராசரியின்  சிறப்பம்சங்கள்


 ◆   a , b  மற்றும்  c என்பன மூன்று எண்கள் எனில் அவற்றின் சராசரி = a+b+c / 3 .

 ◆  சராசரியிலிருந்து அனைத்து உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை பூஜ்ஜியம் ஆகும்.

 ◆ தரவிலுள்ள ஒவ்வொரு உறுப்புடனும் ஒரு மாறா மதிப்பு k ஐ கூட்டினாலோ அல்லது கழித்தாலோ அதன் சராசரியும் மாறா மதிப்பு k அளவு கூடும் அல்லது குறையும்.

◆ தரவிலுள்ள ஒவ்வொரு உறுப்புடனும் ஒரு மாறா மதிப்பு k, k not = 0ஆல்  பெருக்கினாலோ அல்லது வகுத்தாலோ அதன் சராசரிக்யும் மாறா மதிப்பு k ஆல் பெருக்கப்படும் அல்லது வகுக்கப்படும்.
-------------------------------------------------------------

Tags

கருத்துரையிடுக

1 கருத்துகள்
  1. hi sir nan epatha unga web sides and videos parthan ,nan tneb ku apply pani irukkan apati prepare panarathu short period la enku konjam idea solunga ,pls sir

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham