Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

04 ஜூன் 2020 - வியாழன் தினசரி நடப்பு நிகழ்வுகள்

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.அரபிக் கடலில் தோன்றிய 'நிசர்கா' புயல் மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் கரையை கடந்தது.


2. அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி தானிய வகைகள், எண்ணெய் வித்துக்கள் பருப்பு வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு உள்ளவற்றை உற்பத்தி செய்வதிலும் இருப்பதிலும் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.



3.மேற்கு வங்கத்தின் கல்கத்தா துறைமுகத்தை 'சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்' என்று பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


4.அகஸ்தியன், கடுகு என்கிற புனைப் பெயர்களில் எழுதிய பிரபல நகைச்சுவை எழுத்தாளர் டி.எஸ்.ரங்கநாதன் ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் காலமானார்.


5.புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 256 ரயில்களின் சேவையை மாநில அரசுகள் ரத்து செய்திருப்பது தெரிய வந்து உள்ளது. அதில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகபட்சமாக 105 ரயில் சேவை ரத்து செய்துள்ளது.


6. எம்பிபிஎஸ் படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது. இது குறித்து அரசிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.


7.இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையில்லை என்று சீனா தெரிவித்தது.


8.வெளிநாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் வல்லுனர்கள் பணி நிமித்தமான இந்திய வர புதிய விசாக்களை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


9.'டார்க் நெட்' எனப்படும் திருட்டு வலைதளத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களின் ஆதார், நிரந்தர கணக்கு அட்டை, கடவுச்சீட்டு போன்ற தேசிய அடையாள ஆவணங்களில் விவரங்களை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என அதிர்ச்சித் தகவலை 'சிபெல்' என்ற இணைய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.


10.பிரதமரின் ஏழைகளுக்கான நல உதவித் திட்டத்தின் கீழ் 42 கோடி பேருக்கு ரூபாய் 53,248 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என நிதியமைச்சகம் தகவல் தெரிவித்தது.


11.கரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு மீதான செலவு 8 சதவீத அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பம் மீதான செலவு ரூபாய் 6 லட்சம் கோடியாக குறைய வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்