Type Here to Get Search Results !

03 ஜூன் 2020 - புதன் தினசரி நடப்பு நிகழ்வுகள்

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்


1.அசாமில் 3 மாவட்டங்களில் இடைவிடாத மழை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்தனர் 15 பேர் காயமடைந்தனர். அந்த மூன்று மாவட்டங்கள் ஹைலகண்டி, கரீம் கஞ்ச் மற்றும் கச்சார்.


2.அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்க பரிசீலித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.



3. கரோனா தொற்றை முறியடிக்க 5 வழிகள் மத்திய அரசு வெளியிட்டது. அவை வெளியே வந்தால் முக கவசம், கை சுகாதார பயிற்சி, சமூக இடைவேளை, கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பு, தனிமைப்படுத்துதல் ஆகும்.


4.வேளாண் பொருட்கள் விற்பனையை எளிதாக்க புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வேளாண் விளைபொருட்களை எந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளிடமிருந்து எந்த கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.


5.அரபிக் கடலில் உருவாகியுள்ள 'நிசர்கா' புயல் வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


6.இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 1,721 மெகாவாட் உற்பத்தி திறன் மிக்க நீர் மின் நிலையத்தை சீனா அமைக்க உள்ளது.


7.ஜி7 அமைப்பில் இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகளின் இணைத்து அந்த அமைப்பை விரிவுபடுத்த அமெரிக்க அதிபர் ரொனால்ட் திட்டமிட்டுள்ள நிலையில் சீனா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


8.தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கடந்த 2014 ஜூன் 2-ல் தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.