02 ஜூன் 2020 - செவ்வாய் தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூபாய் 53 அதிகரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. 2020 -21 அறுவடை ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ₹1868 நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், தானியங்களுக்கான குறைந்த பட்ச ஆதாரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.


2.புதிதாக கிடைத்துள்ள தொலை மருத்துவம் (டெலிமெடிசின்) முறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நரேந்திர மோடி வலியுறுத்தல். இதில் ஆயுள் நிறை இந்தியா (ஆயுஷ்மான் பாரத்) என்ற திட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர் அதிலும் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் தான் அதிகம் பயன் அடைந்தவர்கள்.


3.மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த இரண்டு பேருந்துகளில் சோதனை அடிப்படையில் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயண சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


4.இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை விவாதம் மூலமாக தீர்வு காண முடியும். அந்நாட்டுடனான எல்லை பிரச்சனை கட்டுப்படுத்தக் கூடிய சூழல் உள்ளது என சீன வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்தார்.


5.அவசர கால கடன் உதவி திட்டத்தின் கீழ் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரே நாளில் ரூபாய் 3200 கோடி மதிப்பிலான கடனை பொதுத்துறை வங்கிகள் வழங்கியது. பொருளாதார நடவடிக்கையில் ஊக்கம் அளிப்பதற்காக 'சுயசார்பு இந்தியா' என்ற பெயரில் ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.


6.ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் ஒடிசா, சிக்கிம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. இதன் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்த இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என மத்திய உணவு, பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.


7.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக பேராசிரியர் இரா. சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


8.கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


9. மத்திய பிரதேசம் இருந்தது சத்தீஸ்கரின் கேரியா மாவட்டத்துக்குள் வெட்டுக்கிளிகள் நுழைந்தனர்.


10.அமெரிக்க கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலரின் தாக்குதலில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு நகரங்களில் ஆறாவது நாளாக வன்முறை போராட்டம் நீடித்தன. இதன் காரணமாக 40 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


11.கரோணா நோய்தொற்றுக்கு ரஷ்ய கண்டறிந்து உள்ள அங்கீகாரம் பெற்ற மருந்து அடுத்த வாரம் முதல் நோயாளிகளுக்கு அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அபிஃபாவிர்' என்ற தீநுண்மி தடுப்பு மருந்து ஜூன் 11 ஆம் தேதியில் இருந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.


12. மே மாதத்தில் எரிபொருள் தேவை ஏறக்குறைய இருமடங்கு அளவுக்கு உயர்வை கண்டது.

கருத்துகள் இல்லை