01 ஜூன் 2020 - திங்கள் தினசரி நடப்பு நிகழ்வுகள்

Share:
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஜூன் 1 முதல் பேருந்துகள் இயக்கவும் பொதுமக்கள் கட்டுப்பாடுகளில் மேலும் பல்வேறு தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் - கரோணா பாதிப்பின் அடிப்படையில் தமிழகத்தை எட்டு மண்டலங்களாக பிரித்து பொது போக்குவரத்து மற்றும் தொழில் நிறுவனங்களை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார் - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு தமிழகத்தின் பிற இடங்களில் பொது போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


2. நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் திங்கள்கிழமை 1 முதல் இயக்கப்பட உள்ளன. குளிர்சாதன வசதி இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மட்டுமே கொண்ட இந்த ரயில்களில் முதல் நாளில் 1.45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்க உள்ளனர் - இவற்றை ஜார்க்கண்ட், ஆந்திரம், மகாராஷ்டிரா மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


3.லடாக்கில் கிழக்குப் பகுதியில் இந்தியா சீனா இடையே எல்லை சர்ச்சை எழுந்துள்ள இடங்களில் இரு நாட்டு ராணுவமும் ஆயுதங்கள் தளவாடங்கள் அதிக அளவில் குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


4.கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த 'குழு எதிர்பாற்றல்' வழி முறையை கையாள்வது இந்தியா மட்டுமின்றி எந்த நாடும் ஆபத்தானது என்று அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் சேகர் மண்டே தெரிவித்தார்.


5.தமிழகத்தில் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் திங்கட்கிழமை முதல் 
இயக்கப்பட உள்ள நிலையில் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் வாங்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


6.ஜி 7 அமைப்பில் இந்தியா உள்பட 4 நாடுகளை இணைத்து அந்த அமைப்பை விரிவுபடுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். அந்த நான்கு நாடுகள் ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா.


7.தமிழக அரசின் வழிகாட்டலின் படி முதல் கட்டமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெதெரிவித்தனர்.


8.அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த இரு வீரர்களை அந்த நாட்டின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டின் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது - தனியார் நிறுவனத்தின் ராக்கெட்டின் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது - அந்நிறுவனத்தின் பால்கன் 9 ரக ராக்கெட் - டக் ஹார்லி, பாப் பேன்கென் வீரர்களை ஏற்றிச் சென்றது.

கருத்துகள் இல்லை