Type Here to Get Search Results !

2024 Group 4 Time and Work

உங்கள் கருத்துக்களை 9442430457 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும் 



 

2013 G4

2014 G4

2016 G4

2018 G4

2019 G4

2022 G4

2

1

3

0

2

2


  காலம் மற்றும் வேலை Group 4
Time & Work Part -1
Time & Work Part -2
Time & Work (சதவீதம்)
Time & Work (விகிதங்கள்)
Time & Work (பின்னம்)
Time & Work (மடங்கு)
Time & Work Part -1A
Time & Work Part -1B



1. A-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிப்பர். B மட்டும் தனியாக அவ்வேலையை 15 நாட்களில் முடித்தால், A தனியாக அவ்வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் எவ்வளவு? (2013 VAO) Part -2
(A) 10 நாட்கள்
(B) 9 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 20 நாட்கள்
Answer (A) 10 நாட்கள்

2. A யும் B யும் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். A மட்டும் அந்த வேலையை 24 நாட்களில் முடித்தால் B மட்டும் அந்த வேலையை முடிக்கத் தேவைப்படுவது (2016 VAO) Part -2
(A) 14 நாட்கள்
(B) 44 நாட்கள்
(C) 120 நாட்கள்
(D) 48 நாட்கள
Answer (C) 120 நாட்கள்

3. ஒரு குழாய் காலியாக உள்ள தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும். மற்றொரு குழாய் அத்தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். ஆரம்பத்தில் தொட்டி காலியாக இருந்துஇ இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எவ்வளவு நேரத்தில் நிரம்பும்? (2016 VAO) Part -2
(A) 1 மணி
(B) 3 மணி
(C) 2 மணி
(D) 4 மணி
Answer (A) 1 மணி

4. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (2019 G4) Part -1
a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 11 நாட்கள்
d. 20 நாட்கள்
Answer b. 12 நாட்கள்

5. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? (2016 G4) Part -1
a. 6 நாட்கள்
b. 5 நாட்கள்
c. 4 நாட்கள்
d. 3 நாட்கள்
Answer d. 3 நாட்கள்

6. A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு (2016 G4) (விகிதங்கள்)
a. ரூ. 1,600
b. ரூ. 2,000
c. ரூ. 3,000
d. ரூ. 3,100
Answer b. ரூ. 2,000

7. முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில்அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்? (2022 Gr4) (பின்னம்)
(A) 2 1/2 நாட்கள்
(B) 3 1/2 நாட்கள்
(C) 4 1/2 நாட்கள்
(D) 5 1/2 நாட்கள்
Answer (B) 3 1/2 நாட்கள்

8. A என்பவர் ஒரு வேலையின் 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1/3 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை (2013 G4) (பின்னம்)
a. 3 நாட்கள்
b. 4 நாட்கள்
c. 5 நாட்கள்
d. 6 நாட்கள்
Answer c. 5 நாட்கள்

9. 10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்? (2022 Gr4) நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
(A) 14 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 16 நாட்கள்
(D) 17 நாட்கள்
Answer (B) 15 நாட்கள்

10. 14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை? (2019 G4) நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
a. 12
b. 10
c. 8
d. 7
Answer b. 10

11. 22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம் (2016 G4) நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
a. 100 மீ
b. 90 மீ
c. 80 மீ
d. 70 மீ
Answer b. 90 மீ

12. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்? (2014 G4) Part -1A
a. 1 1/2 மணிநேரம்
b. இரண்டு மணிநேரம்
c. ஒரு மணி நேரம்
d. 2 1/2 மணி நேரம்
Answer c. ஒரு மணி நேரம்

13. ஒரு வேலையை முழுமையாக தனித்தனியே செய்து முடிக்க A, B, C ஆகியோருக்கு 12 நாட்கள், 6 நாட்கள் மற்றும் 3 நாட்கள் என்க. A, B இருவரும் வேலையை செய்ய ஆரம்பித்து மறுநாள் Cம் அவர்களோடு வேலையை செய்தால், அந்த வேலையை முழுமையாக செய்து முடிக்கத் தேவையானநாட்கள் (2013 G4) Part -1B
a. 2 2/7 நாட்கள்
b. 1 2/7 நாட்கள்
c. 2 1/7 நாட்கள்
d. 1 1/7 நாட்கள்
Answer a. 2 2/7 நாட்கள்

கருத்துரையிடுக

5 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham