Type -1.1
1) ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி விகிதத்தில் மூன்று மடங்கு ஆவதற்கு பிடிக்கும் காலம் (2018 Group 4) (2017, 2018 Group 2), (10-03-2023 TNPSC)
(A) 20 ஆண்டு
(B) 22 ஆண்டு
(C) 25 ஆண்டு
(D) 30 ஆண்டு
Answer
(C) 25 ஆண்டு ✔2) ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டிவீதம் என்னவாக இருக்க வேண்டும் (2019 Group 4)
(A) 10%
(B) 20%
(C) 50%
(D) 25%
Answer
(A) 10% ✔3) ஒரு குறிப்பிட்ட தொகை தனிவட்டியில் முதலீடு செய்யப்பட்டது. அந்த தொகை 10 வருடங்களில் மூன்று மடங்கானால், வட்டி விகிதம் என்ன? (Railways, 2006), (R.S. Aggarwal)
(A) 18% ஆண்டு வட்டி
(B) 20% ஆண்டு வட்டி
(C) 22% ஆண்டு வட்டி
(D) 25% ஆண்டு வட்டி
Answer
(B) 20% ஆண்டு வட்டி ✔4) 10% ஆண்டு வட்டியுடன் ஒரு குறிப்பிட்ட தொகை எத்தனை வருடங்களில் மூன்று மடங்காகும்? (Hotel Management, 2003), (R.S. Aggarwal)
(A) 15 வருடங்கள்
(B) 20 வருடங்கள்
(C) 30 வருடங்கள்
(D) 40 வருடங்கள்
Answer
(B) 20 வருடங்கள் ✔5) ஒரு அசலானது 2 ஆண்டுகளில் 9/4 மடங்கு ஆகும் எனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு? (7th Old Book), (2016 Group 4)
(A) 69 1/2%
(B) 67 1/2%
(C) 62 1/2%
(D) 61 1/2%
Answer
(C) 62 1/2% ✔6) ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (அசல் P = ₹ 100 என வைக்க வேண்டும்). (7th New Book), (29-01-2023 TNPSC), (05-12-2023 TNPSC), (14-05-2023 TNPSC)
(A) 20%
(B) 25%
(C) 30%
(D) 35%
Answer
(B) 25% ✔7) ஆண்டொன்றுக்கு 20 தனிவட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் தொகை இருமடங்கு ஆகும்? (26-10-2024 TNPSC), (2014 Group 1)
(A) 5 வருடங்கள் 3 மாதங்கள்
(B) 5 வருடங்கள்
(C) 5 வருடங்கள் 6 மாதங்கள்
(D) 5 வருடங்கள் 9 மாதங்கள்
Answer
(B) 5 வருடங்கள் ✔8) ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையை போல இரு மடங்காகிறது எனில் எடுத்துக் கொள்ளும் காலம் (2017 Group 1)
(A) 13 1/3 ஆண்டுகள்
(B) 12 1/2 ஆண்டுகள்
(C) 10 1/2 ஆண்டுகள்
(D) 9 ஆண்டுகள்
Answer
(B) 12 1/2 ஆண்டுகள் ✔9) ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டிற்கு எந்த வட்டி விகிதத்தில் இருந்தால், அந்த தொகை 16 வருடங்களில் இரு மடங்காகும்? (12-08-2024 TNPSC)
(A) 7 3/4 %
(B) 6 3/4 %
(C) 8 2/3 %
(D) 6 1/4 %
Answer
(D) 6 1/4 % ✔10) தனிவட்டி மூலம் அசல் ₹2000, 8% வட்டி வீதத்தில் இரட்டிப்பாக எவ்வளவு மாதம் ஆகும்? (2024 Group 2)
(A) 144
(B) 150
(C) 120
(D) 140
Answer
(B) 150 ✔11) ஒரு குறிப்பிட்ட தொகை எந்த தனிவட்டி விகிதத்தில் 15 வருடங்களில் இரட்டிப்பாகும். (Railways, 2005), (R.S. Aggarwal)
(A) 5 1/2% ஆண்டு வட்டி
(B) 6% ஆண்டு வட்டி
(C) 6 2/3% ஆண்டு வட்டி
(D) 7 1/2% ஆண்டு வட்டி
Answer
(C) 6 2/3% ஆண்டு வட்டி ✔ Type -1.2
12) தனிவட்டியில் ஒரு அசல் 10 ஆண்டுகளில் இரு மடங்கானால் அந்த அசல் மும்மடங்காக மாறுவதற்கு அல்லது உயருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? (7th New Book)
(A) 20 ஆண்டுகள்
(B) 24 ஆண்டுகள்
(C) 28 ஆண்டுகள்
(D) 32 ஆண்டுகள்
Answer
(A) 20 ஆண்டுகள் ✔13) குறிப்பிட்ட ஆண்டுகளில் ஓரு அசலானது ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 4 மடங்காகிறது. அதே அசலானது, அதே ஆண்டுகளில் 8 மடங்காக வேண்டுமெனில் தனிவட்டி வீதம் என்ன? (15-03-2023 TNPSC)
(A) 11 3/5%
(B) 11 2/3%
(C) 12 3/5%
(D) 12 2/3%
Answer
(B) 11 2/3% ✔14) ஒரு அசல் தனிவட்டியில் 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் நான்கு மடங்காகும்?
(A) 11 ஆண்டுகள்
(B) 21 ஆண்டுகள்
(C) 31 ஆண்டுகள்
(D) 41 ஆண்டுகள்
Answer
(B) 21 ஆண்டுகள் ✔15) தனிவட்டி வீதத்தில் ஒரு அசலானது 15 ஆண்டுகளில் மும்மடங்காகும் எனில் எத்தனை ஆண்டுகளில் 5 மடங்காக கிடைக்கும்? (12-07-2024 TNPSC)
(A) 25 ஆண்டுகள்
(B) 30 ஆண்டுகள்
(C) 36 ஆண்டுகள்
(C) 40 ஆண்டுகள்
Answer
(B) 30 ஆண்டுகள் ✔16) ஒரு குறிப்பிட்ட தொகை தனிவட்டியுடன் 20 வருடங்களில் அதன் மூன்று மடங்காகும். அதே வட்டி விகிதத்தில் எத்தனை வருடங்களில் அந்தத் தொகை இரண்டு மடங்காகும்? (S.S.C. 2005), (R.S. Aggarwal)
(A) 8 வருடங்கள்
(B) 10 வருடங்கள்
(C) 12 வருடங்கள்
(D) 14 வருடங்கள்
Answer
(B) 10 வருடங்கள் ✔17) ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகையானது 12 வருடங்கள் 6 மாதத்தில் இரண்டு மடங்காகும். எனில், அந்த தொகை அதே வட்டி விகிதத்தில் எத்தனை வருடங்களில் மூன்று மடங்காகும்? (R.S. Aggarwal)
(A) 18 வருடங்கள் 9 மாதங்கள்
(B) 20 வருடங்கள் 8 மாதங்கள்
(C) 22 வருடங்கள்
(D) 25 வருடங்கள்
Answer
(D) 25 வருடங்கள் ✔ Shortcut Video

minnal vega kanitham