81) ஒருவருடைய வருமானம் 10% அதிகரித்து அதன்பின் 10% குறைந்தது. அவருடைய வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன சதவீதம்? (8th New Book) [22-01-2022 TNPSC], [19-06-2022 TNPSC], (05-10-2023 TNPSC), (2025 Group 2/2A), (2025 TNTET Paper -2)
(A) 1% அதிகரிக்கும்
(B) 1% குறையும்
(C) எந்த மாற்றமுமில்லை
(D) 10% அதிகரிக்கும்
82) ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டுப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க. (8th New Book)
(A) மாற்றமில்லை
(B) 5%
(C) 4%
(D) 3%
83) ஒரு கடைக்காரர் தகவல் பலகை ஒன்றை அதன் அடக்க விலையைவிட 15% அதிகமாகக் குறித்து, பிறகு 15% தள்ளுபடி வழங்குகிறார். இந்த பரிவர்த்தனையில், அவர் இலாபம் அடைவாரா அல்லது நட்டம் அடைவாரா? (8th New Book), (2021 Group 1)
(A) லாபம்
(B) நட்டம்
(C) லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை
(D) லாபம் ஆகவும் இருக்கும் நட்டமாகவும் இருக்கும்
84) ஒருவர் ஒரு பொருளை 3% லாபம் வைத்து விலை சொல்கின்றார். பின்பு 3% தள்ளுபடி அளிக்கிறார் எனில் அவர் அப்பொருளை விற்பது? (2014 VAO)
(A) 0.09% லாபத்திற்கு
(B) 0.09% நஷ்டத்திற்கு
(C) 0.9% லாபத்திற்கு
(D) லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை
85) இரு கை கடிகாரங்கள் ஒவ்வொண்றையும் ரூ 594க்கு விற்றார் இவ்வாறு விற்றதில் ஒன்றில் 10% இலாபமும் 10% நட்டமும் ஏற்பட்டது எனில் மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட சதவீதம் (2018 Group 2)
(A) 4%
(B) 3%
(C) 2%
(D) 1%
86) இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு சமமான தள்ளுபடி சதவீதம்? (8th New Book), [06-08-2022 TNPSC], [19-06-2022 TNPSC]
(A) 40%
(B) 5%
(C) 45%
(D) 22.5%
87) ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25%. மற்றும் 20% எனில் இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க. (08-05-2023 TNPSC)
(A) 55%
(B) 60%
(C) 75%
(D) 40%

minnal vega kanitham