Type Here to Get Search Results !

8th தமிழ் இயல் 1 தமிழ் வரிவடிவ வளர்ச்சி, 8th தமிழ் இயல் 5 தமிழர் இசைக்கருவிகள்


தமிழ் வரிவடிவ வளர்ச்சி (தெரிந்து தெளிவோம்)
தெரிந்து தெளிவோம்
● கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பு
1. 'ஸ' எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது.
2. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
3. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
தெரிந்து தெளிவோம்
● தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அறிகிறோம்.
● அரச்சலூர் கல்வெட்டே இதற்குச் சான்றாகும்.
● இக்கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.

8th தமிழ் இயல் 1 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

1. மனிதன் தன் கருத்தை பிறருக்கு அறிவிக்க எதை கண்டுபிடித்தான்? மொழியை
2. மனிதன் மொழியை நிலைபெறச் செய்ய எதை உருவாக்கினான்? எழுத்து
3. பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் இதுவே? எழுத்து வடிவ தொடக்க நிலை
4. எழுத்து என்பது ஓலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது இவ்வரி வடிவத்தை ----- என்பர்? ஓவிய எழுத்து
5. ஓர் ஒலிக்கும் ஓர் எழுத்து என உருவான நிலையை ----- என்பர்? ஒலி எழுத்து நிலை
6. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு? 'ஸ' எனும் வட எழுத்து காணப்படுகிறது. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை
7. எப்பொழுது தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தை பெற்றன? அச்சுக்கலை தோன்றிய பின்பு
8. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் எங்கு காணமுடிகிறது? கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும்
9. கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன? கி. பி (பொ. ஆ. மு) மூன்றாம் நூற்றாண்டு முதல்
10. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன? கி. பி (பொ. ஆ. பி) ஏழாம் நூற்றாண்டு முதல்
11. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றல் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்? இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து
12. சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளின் எட்டாம் நுற்றாண்டுக்குப் முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்றுள்ள எழுத்து எது? வட்டெழுத்துக்கள்
13. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து எது? தமிலேழுத்துகள்
14. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? கண்ணெழுத்துகள்
15. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? சிலப்பதிகாரம்
16. பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துக்களை எதில் எழுதினார்? கற்பாறை, செப்பேடு, ஓலை
17. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கத்தில் இருந்தன என்பதற்கான சான்றை எந்த கல்வெட்டு மூலம் அறியலாம்? அரச்சலூர் கல்வெட்டு
18. நேர்கோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன? கற்பாறை
19. பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்? நேர்கோடுகள்
20. வளைகோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன? ஓலை
21. ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்? வளைகோடுகள்
22. சில எழுத்துகைளை அழகுப்படுத்துவதற்காக அவற்றின் ----- பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது? மேற்பகுதி
23. எகர ஒகர குறில் எழுத்துக்களைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது? தொல்காப்பியர்
24. அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை எவ்வாறு கருதப்பட்டன? நெடிலாகக்
25. ஐகார எழுத்துக்களை குறிப்பிட எழுத்துக்களின் முன் ----- புள்ளி இட்டனர்? இரட்டைப் புள்ளி
26. எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ----- வரிசை எழுத்துக்களாக கருதப்பட்டன? ஓளகார வரிசை
27. நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது? துணைக்கால்
28. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது? இனைக்கொம்பு
29. ஓளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது? கொம்புக்கால்
30. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் யார்? வீரமாமுனிவர்


Book Back
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற --------- காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
[விடை : இ) அச்சுக்கலை]
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ------- என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
[விடை : ஆ) வட்டெழுத்து]
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்.
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ. சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
[விடை : ஆ) தந்தை பெரியார்]
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் --------- அழைக்கப்பட்டன.
விடை : கண்ணெழுத்துகள்
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்
விடை : வீரமாமுனிவர்
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள் - புறநானூறு
கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் - புறநானூறு
தண்டுடுக்கை தாளத்தக்கை சாரநடம் பயில்வார் - சம்பந்தர் தேவாரம்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். - திருக்குறள்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் - திருப்பாவை
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி - பெரியபுராணம்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் - நாச்சியார் திருமொழி

8th தமிழ் இயல் 5 தமிழர் இசைக்கருவிகள்
இசைக்கருவிகள் தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும்.
● 1. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும். (எ.கா.) முழவு, முரசு
● 2. நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும். (எ.கா.) யாழ், வீணை
● 3. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகள் எனப்படும். (எ.கா.) குழல், சங்கு
● 4. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும். (எ.கா.) சாலரா, சேகண்டி

8th தமிழ் இயல் 5 தமிழர் இசைக்கருவிகள்

1. ஒரு சொல்லின் பொருளை ஆரியப் பயன்படுவது? அகராதி
2. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது எது? கலைக்களன்சியம்
3. கலைக்களன்சியத்தில் தகவல்கள் பெரும்பலும் எவ்வாறு தொகுக்கப்பட்டிருக்கும்? அகரவரிசையில்
4. இசை எத்தனை சுவைகளை வெளிப்படுத்தக் கூடியது எது? ஒன்பது சுவை
5. இசையை எவ்வாறு பிரிப்பர்? இரண்டு வகை (குரல்வழி இசை, கருவிழி இசை)
6. இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் யார்? பாணர்
7. "நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன்"என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? புறநானுறு
8.  இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்? நான்கு வகை (தோல்கருவி, காற்றுக்கருவி, கண்சக்கருவி, நரம்புக்கருவி)
9. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள்? தோல்கருவிகள் எனப்படும்
10. நரம்பு அல்லது தந்திகளை உடையவை ----- எனப்படும்? நரம்புக்கருவிகள்
11. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படும் கருவி எது? காற்றுக்கருவிகள் எனப்படும்
12. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படும் கருவி? கன்சாக்கருவிகள் எனப்படும்
13. உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு? கைப்பறை ஆகும்
14. உடுக்கை எந்த வகை  இசைக்கருவி? தோல்கருவி
15. உடுக்கையின் உடல் எதனால் ஆனது? பித்தளை
16. உடுக்கையின் வாய்ப்பகுதி எதனால் ஆனது? ஆட்டுத்தோல்
17. உடுக்கையின் எந்தப் பகுதியில் அடிப்பார்? வலது
18. பெரிய உடுக்கைக்கு என்ன பெயர்? தவண்டை
19. சிறிய உடுக்கைக்கு என்ன பெயர்? குடுகுடுப்பை
20. எங்கு நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் குடுகுடுப்பை காணலாம்? தில்லையில்
21. இறை வழிபாட்டின் போதும் குறிசொல்லும்போது எக்கருவி இசைக்கப்படுகிறது? குடுகுடுப்பை
22. "தண்டுடுக்கை"தாளந்தக்கை சாரநடம் பயில்வார் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? திருநானசம்பந்தர் (தேவாரம்)
23. குடமுழா எந்த வகையை சேர்ந்த இசைக் கருவி? தோல்கருவி
24. ஐந்து முகம் மற்றும் முரசு வகையை சேர்ந்தது எது? குடமுழா
25. குடமுழாவில் எத்தனை வகையான ஓசை பிறக்கும்? 5 வகையான ஓசை
26. குடமுழாவில் வரும் ஓசையை எவ்வாறு அழைப்பர்? பஞசமகா சப்தம்
27. கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் இசைக்கருவி எது? குடமுழா
28. சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் இசைக்கருவி? குடமுழா
29. குழல் என்ன வகையான கருவி? காற்றுக்கருவி
30. குழலை எவ்வாறு அழைப்பர்? வேய்ங்குழல், புல்லாங்குழல்
31. குழலில் எத்தனை துளைகள் இருக்கும்? 7 துளைகள்
32. குழல் எவ்வளவு நீளம் உடையதாக இருக்கும்? 20 விரல் நீளம்
33. மூங்கில் தவிர குழல் எந்தெந்த மரங்களில் செய்யப்படுகிறது? சந்தானம், பெங்காலி, கருங்காலி
34. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் என பலவகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல்? சிலப்பதிகாரம்
35. "குழல்இனிது யாழ்இனிது என்பதன் மக்கள் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்? திருக்குறள்
36. கொம்பு எந்த வகை இசைக்கருவி? காற்றுக்கருவி
37. கொம்புகள் இக்காலத்தில் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறன? பித்தளை, வெண்கலம்
38. வேடர் பயன்படுத்தும் இசைக்கருவி எது? கொம்பு
39. கழனி மேடுகளில் காவல் புரிவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் பயன்படுவது? கொம்பு
40. பலவகையான கொம்புகள் யாவை? ஊதுகொம்பு, எக்காளம் சிங்கநாதம், துத்தரி
41. சங்கு எந்த வகை இசைக்கருவி? காற்றுக்கருவி
42. சங்கு ஒரு? இயற்கைகருவி
43. வலமாக சுழிந்து இருக்கும் சங்கு? வலம்புரிச்சங்கு
44. சங்கின் ஒலி யாது? சங்கநாதம்
45. சங்கை இலக்கியங்களில் எவ்வாறு எவ்வாறு கூறுவார்? பணிலம்
46. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்"என்ற வரியை கூறும் நூல்? திருப்பாவை
47. சாலரா என்ன வகைக் கருவி? கண்சக்கருவி
48. சாலாராவின் மற்றொரு பெயர் என்ன? பாண்டில்
49. சாலரா எதனால் செய்யப்பட்டிருக்கும்? பித்தளை, வெண்கலம்
50. சேகண்டி என்ன வடிவில் இருக்கும்? வட்டவடிவான மணி வகை
51. சேகண்டி என்ன வகை இசைக்கருவி? கன்சக்கருவி
52. சேகண்டி மற்றொரு பெயர் யாது? சேமங்கலம்
53. கோவில் திருவிழா, இறுதி ஊர்வலம் போதும் இசைப்பது? சேகண்டி
54. திமிலை எந்த வகை இசைக்கருவி? தோல்க்கருவி
55. பலா மரத்தினால் செய்யப்படடு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி எது? திமிலை
56. திமிலை எவ்வடிவில் அமைந்திருக்கும்? மணற்கடிகார வடிவில்
57. திமிலை எவ்வாறு அழைப்பர்? பாணி
58. "வெங்குறல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளன நூல்? பெரியபுராணம்
59. பறை என்ன வகை இசைக்கருவி? தோல்க்கருவி
60. பழங்காலத்தில் செய்திகளை தெரிவிக்க எதை பயன்படுத்தினர்? கோட்பறை
61. ஆநிரையை கவரும் போது எதை முழங்கினர்? ஆகோட்பறை
62. பறை இக்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தப்பு
63. பறையைக் கொண்டு ஆடும் ஆட்டம் எது? தப்பாட்டம்
64. மத்தளம் என்ன வகை இசைக்கருவி? தோல்க்கருவி
65. மத்த + தளம் = மத்தளம் என்று கூறியவர் யார்? அடியார்க்கு நல்லார்
66. முதற்கருவி எது? மத்தளம்
67. எந்தக் கோவில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என கூறுவது? தஞசை பெரிய கோவில்
68. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? நாச்சியார் திருமொழி
69. முரசு எந்த வகை இசைக்கருவி? தோல்க்கருவி
70. தமிழர்கள் போர்த் துணையாக கொண்ட கருவிகளுள் முதன்மையானது எது? முரசு
71. மூன்று வகையான முரசுகள் யாவை? படைமுரசு, கோட்டைமுரசு, மனமுரசு
72. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல்? சிலப்பதிகாரம்
73. முரசை"மாக்கண் முரசம்"என்று கூறும் நூல்? மதுரைக்கான்சி
74. முழவு எந்த வகை இசைக்கருவி? தோல்க்கருவி
75. ஒரே முகத்தை உடைய முரசு வகை? முழவு
76. முழவுவை "மண்ணமை முழவு'என கூறும் நூல்? பொருநராற்றுப்படை
77. காலத்தை அறிவிக்க பயன்பட்ட முழவுகள் யாவை? நாழிகை முழவு, காலை முழவு
78. "கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பலம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? புறநானுறு
79. யாழ் என்ன வகை இசைக்கருவி? நரம்புக்கருவி
80. யாழின் அடிப்படை யாது? வில் நாணில் இருந்து எழும் ஓசை
81. யாழின் வடிவம் மறைந்து என்ன கருவி உருவானது? வீணை
82. மிகப்பழமையான யாழ் எது? பேரியாழ், செங்கோட்டியாழ்
83. இருபத்தொரு (21) நரம்புகளை கொண்டது? பேரியாழ்
84. பத்தொன்பது (19) நரம்புகளை கொண்டதாக மீன் வடிவில் அமைந்து? மகரயாழ்
85. பதினான்கு (14) நரம்புகளைக் கொண்டது? சகோடயாழ்
86. வீணை எந்த வகை இசைக்கருவி? நரம்புக்கருவி
87. வீணையில் எத்தனை நரம்புகள் உள்ளன? 7 நரம்புகள்
88. யாழ் போன்ற அமைப்புடையை நரம்புக்கருவி? வீணை
89. பரிவாதினி என்னும் வீணை எந்த மன்னன் காலத்தில் இருந்து வழக்கில் உள்ளது? பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.