Type Here to Get Search Results !

கல்விக்கண் திறந்தவர் 6th New Tamil Book


கல்விக்கண் திறந்தவர்

1. ஊர்தோறும் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என்று கூறியவர் யார்? காமராசர்

2. கல்விக் கண் திறந்தவர் என்று போற்றப்படுபவர் யார்? காமராசர்

3. கல்விக் கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்? தந்தை பெரியார்

4. காமராசர் நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளை திறக்க முடிவு செய்தார்? 50000பள்ளிகளை

5. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்? ஒரு மைல்

6. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்? 3 மைல்

7. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்? 5 மைல்

8. பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்மவீரர் என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்? காமராசர்

9. கருப்புக் காந்தி, ஏழைப்பங்காளர், தலைவர்களை உருவாக்குபவர் என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்? காமராசர்

10. காமராசர் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டிருந்தன? 6000

11. மாநிலம் முழுவதும் அனைவருக்கும் "இலவசக் கட்டாயக் கல்வி" சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர் யார்? காமராசர்

12. மாணவர்கள் பசியின்றிப் படிக்க "மதிய உணவுத் திட்டத்தைக்" கொண்டு வந்தவர் யார்? காமராசர்

13. பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் "சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்? காமராசர்

14. பள்ளிகளின் வசதிகளைப் பெருக்க "பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள்" நடத்தியவர் யார்? காமராசர்

15. எந்தப் பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது? மதுரை

16. எந்த ஆண்டு நடுவண் அரசு காமராசருக்குப் பாரதரத்னா விருது வழங்கியது? 1976 ம் ஆண்டு

17. காமராசர் வாழ்ந்த இல்லம் எங்கு எங்கு உள்ளது? சென்னை மற்றும் விருதுநகர்

18. காமராசருக்கு எங்கு சிலை நிறுவப்பட்டது? சென்னை மெரினா கடற்கரை

19. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு யார் பெயர் சூட்டப்பட்டுள்ளது? காமராசர்

20. கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது? 2.10.2000 ஆம் ஆண்டு

21. ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான _____ நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது? ஜூலை 15

22. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் என்ன? ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

23. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க _____ அறிமுகப்படுத்தினார்? சீருடை திட்டம்

24. காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு? 1954.


Previous Year Questions

1. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் [2022 Group 4]

A) எம்.ஜி.இராமச்சந்திரன்                                                  

B) மூதறிஞர் இராஜாஜி

C) பெருந்தலைவர் காமராசர்                                   

D) கலைஞர் கருணாநிதி

 

2. காமராசரைக் கல்விக் கண் திறந்தவர் என்று மனதாரப் பாராட்டியவர்? (2022 Group 2)

A) அறிஞர் அண்ணா                                                          

B) மனிதருள் மாணிக்கம் நேரு

C) மூதறிஞர் இராஜாஜி                                                      

D) தந்தை பெரியார்

 

3. காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர் யார்? (2022 TNTET Paper1)

A. திரு.வி.க.                                                                          

B. தந்தை பெரியார்

C. அறிஞர் அண்ணா                                                          

D. மு. வரதராசனார்

 

4. காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட இடம்: (2022 TNTET Paper -1)

A: விருதுநகர்                                                                        

B: சென்னை

C: கன்னியாகுமரி                                                  

D: தூத்துக்குடி

 

5. குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் (2022 TNUSRB PC)

(A) பக்தவச்சலம்                                                                  

(B) எம். ஜி. ராமச்சந்திரன்

(C) ஜெ. ஜெயலலிதா                                                          

(D) கு. காமராசர்

 

6. தலைவர்களை உருவாக்குபவர் – என அழைக்கப்பட்டவர் யார்? (2023 Group 3A)

(A) எம்.ஜி.ஆர்                                                                      

(B) காமராசர்

(D) பேரறிஞர் அண்ணா                                                     

(C) இந்திராகாந்தி

 

7. காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு (2013 TNTET Paper -2)

A. 1954                                                                

B. 1955

C. 1956                                                                                 

D. 1957

 

8. பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? (Madras High Court Exam 2021))

(A) எம்.ஜி.ஆர்                                                                      

(B) காமராஜர்

(C) அண்ணாதுரை                                                              

(D) பக்தவச்சலம்


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.