Type Here to Get Search Results !

6th New Tamil Book Unit -1, 2 நூல்வெளி & தெரிந்து தெளிவோம்


நூல்வெளி
இயல் 1.1 இன்பத்தமிழ் (பாரதிதாசன்)
• பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
• தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
• இவர் பாவேந்தர் என்னும் சிறப்பிக்கப்படுகிறார்.
• இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.

நூல்வெளி
இயல் 1.2 தமிழ்க்கும்மி (பெருஞ்சித்திரனார்)
• பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
• இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
• தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
• இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
• இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
• இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.

தெரிந்து தெளிவோம்.
இயல் 1.3 வளர்தமிழ்

தெரிந்து தெளிவோம்.
இயல் 1.4 கனவு பலித்தது
தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
● மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல்கலாம்
● இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
● இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.

நூல்வெளி
இயல் 2.1 சிலப்பதிகாரம்
• சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
• இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
• இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
• இதுவே தமிழின் முதல் காப்பியம்.
• இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.
• அவ்வாழ்த்துப்பகுதி நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.

நூல்வெளி
இயல் 2.2 காணி நிலம் (பாரதியார்)
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
• அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
• தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
• மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
• பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

தெரிந்து தெளிவோம்.
இயல் 2.3 சிறகின் ஓசை
• தெரிந்து தெளிவோம்
• கப்பல் பறவை சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird), இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் பறவை மனிதர்
• இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி.
• தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். அதனால், அவர் 'இந்தியாவின் பறவை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார்.
• பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.
• தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fali of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.

• பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும்.
• உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் - 20

நூல்வெளி
இயல் 2.6 திருக்குறள்
● திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.
வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு
● திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.
● "திருக்குறளில் இல்லாததும் இல்லை. சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.
● திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.