Type Here to Get Search Results !

6th New Tamil Book Unit - 7, 8, 9 நூல்வெளி & தெரிந்து தெளிவோம்


நூல்வெளி
இயல் 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்
• தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.
புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.
• இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தெரிந்து தெளிவோம்
இயல் 7.2 வேலுநாச்சியார்
● வேலுநாச்சியாரின் காலம் 1730-1796
● வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780.
ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்.

நூல்வெளி
இயல் 8.1 பராபரக் கண்ணி
• இப்பாடலை எழுதியவர் தாயுமானவர்.
திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.
• இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.
• இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்.
• இப்பாடல்கள் 'பராபரக் கண்ணி' என்னும் தலைப்பில் உள்ளன.
• 'கண்ணி' என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

நூல்வெளி
இயல் 8.2 நீங்கள் நல்லவர்
• கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர், கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
• இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

நூல்வெளி
இயல் 8.4 பாதம்
எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
• நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.
உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
• இக்கதை தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

நூல்வெளி
இயல் 9.1 ஆசியஜோதி (கவிமணி தேசிக விநாயகனார்)
• தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா [Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
• இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

தெரிந்து தெளிவோம்
இயல் 9.2 மனிதநேயம்
தெரிந்து தெளிவோம்.
• "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" – வள்ளலார்
தெரிந்து தெளிவோம்
• வாழ்க்கை என்பது
நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில்
• நீ வாழும் வரை - அன்னை தெரசா
தெரிந்து தெளிவோம்
• குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம்.
•உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது. - கைலாஷ் சத்யார்த்தி

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.