6th New Book
அன்புடைமை
7. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
எண்பும் உரியர் பிறர்க்கு.
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.
8. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.
இனியவை கூறல்
9. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்றவை அணிகலன்கள் ஆகா.
10. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.*
இனிய சொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது.
ஊக்கமுடைமை
5. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.
6. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.
தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.
7. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு*
தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப்பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்.
8. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
எண்ணுவதை உயர்வாகவே எண்ணுக. எண்ணியதை அடையாவிட்டாலும் எண்ணத்தைக் கைவிடக் கூடாது.
minnal vega kanitham