காற்புள்ளி (,) |
---|
11th New Book
• காற்புள்ளி (,) பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும். i) அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு. ii) நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும். iii) இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான். iv) ஐயா; அம்மையீர், v) சிறியவன் பெரியவன், செல்வன் ஏழை. 8th New Book காற்புள்ளி (,) 1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும். (எ.கா) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள். 2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும். (எ.கா.) அன்புள்ள நண்பா, 3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும். (எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான். 4. மேற்கோள் குறிகளுக்கு (") முன் காற்புள்ளி வரும். (எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து,"நிலா நிலா ஓடி வா" என்று பாடியது. 5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும். (எ.கா.) ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர். 10th Old Book காற்புள்ளி (,) பொருள்களை எண்ணும் நிலை, விளி, வினையெச்சம், மேற்கோள் குறிகளுக்குமுன், ஆதலால், ஆகவே முதலிய சொற்களின்பின், முகவரியில் இறுதிவரி தவிர்த்த பிற இடங்களில் காற்புள்ளி இடுதல் வேண்டும். (எ-டு) 1. நிலம், நீர், தீ, காற்று, வான் என்பன ஐம்பூதங்கள். 2. மகனே, நான் சொல்வதைக் கேள். 7th Old Book காற்புள்ளி (,) பல பொருள்களைத் தொடர்ந்து சொல்லும்போது, ஒவ்வொன்றின் பின்னும் காற்புள்ளி இடுதல் வேண்டும். (கடைசிச் சொல்லுக்குப்பின் காற்புள்ளி தேவையில்லை) (எ.கா.) மா, பலா, வாழை முக்கனிகள். |
நிறுத்தக்குறிகள்
ஆகஸ்ட் 03, 2025
0
minnal vega kanitham