ஜி.யு.போப் |
---|
வாழ்க்கை குறிப்பு
பெயர்: ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப் பிறந்த ஊர்: பிரான்ஸ் (இங்கிலாந்து) நாட்டின் எட்வர்ட் தீவு பிறப்பு: கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி பெற்றோர்: ஜான் போப், கேதரின் போப் ஜி யு போப் சிறப்பு பெயர் ● தமிழ் பாடநூல் முன்னோடி ● வேத சாஸ்திரி ● செந்தமிழ்ச் செம்மல் சிறப்பு: “இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை எல்லாம் வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்” என்றார்? ஜூலியன் வில்சன் ஜி.யு.போப் மொழிப்பெயர்ப்பு நூல்கள் ● திருக்குறள் ● நாலடியார் ● திருவாசகம் ● புறநானூறு (சில பாடல்கள்) ● புறப்பொருள் வெண்பா மாலை (சில பாடல்கள்) ஜி.யு.போப் படைப்புகள் ● தமிழ் செய்யுட் கலம்பகம் ● தமிழ்க்கையேட்டை ● ஜி.யு.போப் தமிழ்மொழியை பற்றி கட்டூரை எழுதிய நூல்கள் : இந்தியன் சஞ்சிகை ● இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு (இதில் புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத்திணை விளக்கங்களும் தமிழ்ப்புலவர் வரலாறும் இடம்பெற்றுள்ளது) ● ஐரோப்பியர் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுவதற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார். ● ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை தமிழில் எழுதிப் பதிப்பித்தார். ● போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ● மேலை நாட்டார் தமிழைக் கற்றுக்கொள்வதற்க்காக்காக ஜி.யு.போப் வெளியிட்ட அதிகாரங்கள் : தமிழ் -ஆங்கில அகராதி, ஆங்கிலம் -தமிழ் அகராதி ● பரிதிமாற்கலைஞரின் தனிப்பாசுரத்தொகை என்னும் நுலினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? ஜி.யு.போப் குறிப்பு ● செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி.யு.போப் 1839ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார். ● இவர் 19ஆம் வயதில் தமிழகம் வந்தார் ● ஜி.யு.போப் கப்பலில் தமிழகம் வந்து சேர ஆன காலம் -8 மாதங்கள் ● அந்த எட்டுத்திங்களையும் வீணே கழிக்காமல், தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் படித்தார் ● சென்னையை அடைந்த போப் “சாந்தோம்” என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ● தமிழகத்தில் சமயமணி செய்த ஜி.யு.போப்பின் தமையனார் பெயர் -ஹென்றி ● ஜி.யு.போப் அவர்களுக்கு தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது? புறநானூறு ● ஜி.யு.போப் திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை. ● பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார்? ஜி.யு.போப் ● பள்ளிக்கூட மாணவர்கள் தாய்மொழி வழியாக கல்வி கற்பதே சிறந்தது என்று கருதினார்? ஜி.யு.போப் ● ஜி.யு.போப் பள்ளிளை நிறுவிக் கல்விப்பணியையும் சமயப்பணியையும் ஒருங்கே செய்த இடம் -சாயபுரம் ● ஜி.யு.போப் கல்லூரி ஆசிரியராக கற்பித்த பாடங்கள் : கணிதம், அறிவாய்வு(தருக்கம்), மெய்யறிவு (தத்துவம்) ● ஜி.யு.போப் திருமணம் செய்தகொண்ட ஆண்டு -1850 ● திருமணத்திற்கு பிறகு ஜி.யு.போப் சமயப்பணி செய்த இடம் -தஞ்சாவூர் ● ஜி.யு.போப் தொகுத்த நூல் - தமிழ்ச் செய்யுள் கலம்பகம் ● தமிழ் செய்யுள் கலம்பகத்தில் பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600 செய்யுள்கள் நீதி நூல்களிலிருந்து எழுதினார். ● உவே.சா அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்? ஜி.யு. போப் & சூலியல் விள்சோன் ● ஜி.யு.போப் திருக்குறளை எத்தனை ஆண்டுகள் படித்துச் சுவைத்தார் -40 ஆண்டுகள் ● ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு? 1886 ● ஜி.யு.போப் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை எப்போது வெளியிட்டார் -1900 ஆம் ஆண்டு தமது 86 ஆம் அகவையில் ● ஜி.யு.போப் திருவள்ளுவரை உலகப்புலவர் என்று போற்றுகிறார். ● எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழக்கு நலம் அருளிய பெரியார் ஜி.யு.போப் ஆவார். ● ஜி.யு.போப் காலமான நாள் -1908 ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11 ஆம் நாள் ● தான் ஒரு தமிழ் மாணவன் என்று கூறிக்கொண்டவர்? ஜி.யு.போப் ● தமது கல்லறையில் என்ன எழுத வேண்டுமென்று ஜி. யு. போப் தமது இறுதி முறியில் (உயில்) எழுத வைத்தார் "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டடிருக்கிறான்" ● "இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார் " - யார்? ஜி.யு.போப் |
வீரமாமுனிவர் |
---|
பெயர் : வீரமாமுனிவர்
இயற்பெயர் : கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி பெற்றோர் : கொண்டல் போபெஸ்கி எலிசபெத் பிறந்தநாடு : இத்தாலி காலம்: 08. 11. 1680 முதல் 04. 02. 1747. வரை அறிந்தமொழிகள்: இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமற்கிருதம் சிறப்புபெயர் : ● கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழிச் சொல்லுக்கு அஞ்சாமை என்பது பொருள். ஆகவே இவர் தம் பெயரைத் "தைரியநாதசாமி" என்று மாற்றிக் கொண்டார். ● தமிழ்ச்சான்றோர் இவரை வீரமாமுனிவர் என்று அழைத்தனர். சிறப்பு : ● தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகத்துக்கு வந்தார் ● தமிழில் முதன்முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டார்; ● தேம்பாவணி என்னும் கிறித்தவக் காப்பியத்தை இயற்றினார்; ● தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்; இயற்றிய நூல்கள் : ● சிற்றிலக்கியங்கள், உரைநடை, அகராதி, மொழி பெயர்ப்பு, இலக்கணம், பெருங்காப்பியம் என்று தமிழிலக்கிய வரலாற்றில் அவரது பங்களிப்பு நிலைபேறுடையதாக விளங்குகிறது. ● வீரமாமுனிவரின் நூல்கள் பெயர் : 1. தேம்பாவணி 2. பரமார்த்த குரு கதை 3. தொன்னூல் விளக்கம் 4. திருக்காவலூர்க் கலம்பகம் 5. ஞானோபதேசம் 6. சதுரகராதி 7. வேதியர் ஒழுக்கம் 8. கித்தேரியம்மாள் அம்மானை 9. செந்தமிழ் இலக்கணம் 10. கொடுந்தமிழ் இலக்கணம் ● தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலைப் படைத்தார்; ● கலம்பகம், அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை இயற்றினார்; ● பரமார்த்தகுரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார். ● ஞானக்கண்ணாடி - சமய நூல் ● வேதவிளக்கம் - உரைநடை வடிவிலான சமயநூல் ● திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் இரண்டனையும் வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் மொழிப் பெயர்த்துள்ளார். ● 1710 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் முப்பத்தேழாண்டுகள் சமயப் பணியுந் தமிழ்ப் பணியும் புரிந்து 1747 ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்கையெய்தினார். ● He is a Prince among the Tamil Poets (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர் - திருத்தக்க தேவர் ● "தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது; தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்" எனச் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார். |
minnal vega kanitham