Type Here to Get Search Results !

பெருஞ்சித்திரனார் & தேவநேயப்பாவாணர்


பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் - துரை. மாணிக்கம்.
சிறப்பு பெயர் – பாவலரேறு
ஊர் - சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்.
பெற்றோர் - துரைசாமி, குஞ்சம்மாள் ஆவர்.
காலம் - 10.03.1933 அன்று பிறந்த இவர், 11.06.1995ஆம் நாள் மறைந்தார்.
நூல் - கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம், உலகியல் நூறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.
இதழ்கள்- தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள்மூலம் உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்க இவர் பாடுபட்டார்.
• தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
• இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது.
• இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
• கனிச்சாறு - எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது

தேவநேயப்பாவாணர்
வாழ்க்கை குறிப்பு:
• பெற்றோர் - ஞானமுத்து, பரிபூரணம்
• ஊர் – சங்கரன்கோவில்
• கல்வி - பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ், பி.ஓ.எல்.,
• காலம் - 07.02.1902 - 15.01.1981
• சிறப்பு: செந்தமிழ்ச்செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப்பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்
தமிழ்பற்று:
• தன்மை மோதிய மிதிவண்டிக்காரர் கூறிய மன்னித்து கொள்க என்ற சொல்லை, மன்னிப்பு உருதபச்சொல், பொறுத்துக்கொள்க என தமிழில் சொல்லவும் என்று கூறி, மிதிவண்டிக்காராரையும் சொல்லச் செய்தவர்.
தமிழை வளர்த்தவர்:
• தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர் – கால்டுவெல்
• தனித் தமிழுக்கு வித்திட்டவர் – பரிதிமாற்கலைஞர்
• தமிழைத் தழைக்கத் செய்த செம்மல் – மறைமலையடிகள்
• தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் - தேவநேயப்பாவாணர்.
தமிழை மீட்டல்:
• மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தனித்தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கியப் பெட்டகம்; இலக்கணச் செம்மல்; தமிழ்மானங் காத்தவர்.
• உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும் வேறும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவியவர்.
• உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் அவரது ஆய்வின் இரு கண்கள்.
• "தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைதான்" என்று கூறினார்.
அனைத்தும் தமிழில்:
• கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் என்றார்.
• பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் என்றும் பாவாணர் வலியுறுத்தினார்.
பகலுணவு, இரவுணவு:
• ஒருமுறை தன் ஆசிரிய நண்பர்களுடன் சென்று தாரைமங்கலம் (தாரமங்கலம்) என்னும் ஊரில் தங்கினார்.
• அங்கு ஒருவர் பாவனாரிடம், "ஐயா பகலுணவும் இராவுணவும் எவ்வாறு இருந்தன?" என்று கேட்டார்.
• பாவாணர், "பாகல் உணவு, பகல் உணவாகவும் (பகலில் கிடைத்த சிறிதளவு உணவையே அனைவரும் பகுத்துண்ண நேர்ந்தது), இரா உணவாகவும் (அனைவரும் உணவின்றி இரவைக் கழித்தல்) இருந்தன" என்றார்.
• தமிழ் வளர்த்தல் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்று எண்ணியவர் பாவாணர்.
நீலமலை(நீலகிரி):
• ஒருமுறை நீலமலைக்குச் சென்று அங்கு கிருட்டினையா என்பவர் வீட்டில் உணவு உண்டார்.
• கிருட்டினையா வெளியே சென்று மீண்டும் வீடு வரும்போது பாவாணர் அங்கு விறகு வெட்டி கொண்டு இருந்தார்.
• கிருட்டினையா, இதை நீங்கள் செய்ய வேண்டாம் என கூறியதற்கு, "உண்ட வீட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும், உட்கார்ந்து கொண்டு உண்டு செல்வது நன்றாகாது" என்றார்.
பாவாணரின் (43) படைப்புகள்:
• தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்? 43
தேவநேயப் பாவாணரின் படைப்புப் பணி
1. தமிழ் வரலாறு
2. முதல் தாய்மொழி
3. மண்ணிலே விண்
4. பண்டைத் தமிழர்
5. நாகரிகமும் பண்பாடும்
6. உயர்தரக் கட்டுரை இலக்கணம்
7. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
8. திருக்குறள் மரபுரை
9. தமிழ்நாட்டு விளையாட்டுகள்
10. தமிழர் திருமணம்'
11. வடமொழி வரலாறு
12. தமிழர் மதம்
அகரமுதலி:
• பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக 08.05.1974 அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சில தொகுதிகளை வெளிக்கொணர்ந்தார்.
• இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தன்மானம் மிக்கவர்:
• தாம் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்றஇயலாத சூழல் நேர்ந்தபோது, "எனக்கு வறுமையும் உண்டு; மனைவிமக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" என்று வெளியேறினார்.
சிறப்புகள்:
• பாவாணர் பெயரில் சென்னை அண்ணாசாலையில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
• இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையத்திற்கு அருகிலுள்ள முறம்பில், பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
தமிழன்னைக்கு பெருமை:
• மதுரையில் 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, "மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்கு பெருமை சேர்த்தார்.
நூல் வெளி (10th New Tamil Book)
• மொழி ஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் "சொல்லாய்வுக் கட்டுரைகள்" நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது.
• இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.
• பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.
• செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.