Type Here to Get Search Results !

தவத்திரு குன்றக்குடி அடிகளார், உருத்திரங்கண்ணனார்


கடியலூர் உருத்திரங் கண்ணனார் (7th New Tamil Unit - 4)
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை*...... - கடியலூர் உருத்திரங் கண்ணனார்

நூல் வெளி
• கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
• இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
• இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
• பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
• இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
• வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் (7th New Tamil Book Unit - 8)
• மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் - வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
• குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.
• திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.
• நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார்.
• ஒப்புரவு நெறி என்னும் தலைப்பில் அடிகளார் கூறியுள்ள கருத்துகள் நம் பாடப் பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
1. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது? திருக்குறள்
2. ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடமை நெறியே ----- வாழும் நெறி? திருவள்ளுவர் நெறி
3. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும்" இம்முறையை எடுத்துக் கூறியவர் யார்? அப்பரடிகள்
4. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் "என்பதை வழிமொழிந்தவர் யார்? காந்தியடிகள்
5. "உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர் யார்? பாவேந்தர் பாரதிதாசன்
6. "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? புறநானுறு
7. ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது எது? உழைப்பு
8. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது ----- நெறி? பொதுவுடமை
9. செல்வத்தின் பயன் ----- வாழ்வு? ஒப்புரவு
10. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ----- என்றும் கூறுவர்? மருந்து
11. "உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர்? பாரதிதாசன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.