Type Here to Get Search Results !

முடியரசன், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், நாமக்கல் கவிஞர்


முடியரசன்
• பெயர் : முடியரசன்
• இயற்பெயர் : துரைராசு
• பெற்றோர் : சுப்பராயலு - சீதாலட்சுமி
• ஊர் : தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்.
• இயற்றிய நூல்கள் : பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள் முதலியன.
• பணி : தமிழாசிரியர், மீ.சு. உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி.
• பட்டம் : பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது.
• பரிசு : பூங்கொடி என்னும் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு, பரிசு வழங்கியது.
• சிறப்பு : முடியரசன், பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
• காலம்: 07.10.1920 முதல் 03.12.1998 வரை

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர்;
• திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.
• உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார்.
• பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர்.
• இவர் வாழ்ந்த காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை

வெ. இராமலிங்கனார் (நாமக்கல் கவிஞர்)
• கவிஞர் வெ. இராமலிங்கனார் (நாமக்கல் கவிஞர்)
• நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் பிறந்தவர்.
• இவர்தம் பெற்றோர் வெங்கட்ராமன், அம்மணி அம்மாள் ஆவர்.
• இவர், கவிதைப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றார்.
தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர்.
• இவருக்கு நடுவணரசு பத்மபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது.
• இவர், தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப் பெருமையுடன் வழங்கப்படுகிறார்.
• இவரின் காலம் கி.பி. 1888 முதல் 1972 வரையாகும்.
• நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் தெய்வத் திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்திமலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ்மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவை மலர் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன.
• நாமக்கல்லாரின் படைப்புகள்
i) இசைநாவல்கள் – 3
ii) கட்டுரைகள் – 12
iii) தன்வரலாறு – 3
iv) புதினங்கள் – 5
v) இலக்கியத்திறனாய்வுகள் – 7
vi) கவிதைத்தொகுப்புகள் – 10
vii) சிறுகாப்பியங்கள் – 5
viii) மொழிபெயர்ப்புகள் - 4

• முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர்.
• அவர் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்துள்ளார்.
• உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்கள் வழிநடைப் பாடலாகப் பாடுவதற்குக் கவிஞர் இயற்றிய 'கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்னும் பாடல் விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவராலும் உணர்ச்சியுடன் பாடப்பெற்ற புகழ்மிக்க பாடலாகும்.
• கவிஞரின் நாட்டுப்பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழகச் சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.