உ.வே.சாமிநாதன் | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
• பெயர்- உ.வே.சாமிநாதன்
• ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம் • இயற்பெயர் – வேங்கடரத்தினம் • ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. • உ.வே.சா.வின் ஆசிரியர் அவருக்கு வைத்த பெயர் சாமிநாதன். • உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா • தமிழ்த்தாத்தா என்று உ.வே.சா அவர்களை அழைக்கின்றோம். • உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்: மகாமகோபாத்தியாய, வித்தியா பூசணம், தாஷிணாத்திய கலாநிதி • ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா • இவரின் தந்தை – வேங்கடசுப்பையா • காலம் - 19.02.1855 முதல் 28.04.1942 வரை • உ.வே.சா. அவர்களின் பெயரால் 1942ம் ஆண்டு நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. • உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது. • உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர். • நடுவணரசு உ.வே.சா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006ம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. • உ.வே.சா அவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. • "குறிஞ்சிப்பாட்டு" என்னும் சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக எழுதிக் கொண்டிருந்தார். • 'குறிஞ்சிப்பாட்டு' சுவடியில் தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் காணப்படும். (அப்போது 96 பூக்களின் பெயர்கள் மட்டுமே தெளிவாக இருந்தது) • குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர். • உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார். • உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம். • உ.வே.சாமிநாதர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் ஆற்றில்விட்ட ஓலைச் சுவடியை எடுத்தார். • நமக்காகத் தாளில் எழுதிஅச்சிட்டுப் புத்தகத்தை வழங்கியவர்? உ.வே.சாமிநாதய்யர் • யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர்? உ.வே.சா • மடங்களிலே மறைந்து கிடந்த தமிழை மக்கள் மடியிலே தவழச் செய்தவர்? உ.வே.சா • பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர். • ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது. • ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட்ட நாள் ஆடிப்பெருக்கு. • ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர். • பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா என்று கூறியவர் யார்? உ.வே.சா • உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
• 1932-இல் சென்னைப் பல்கலைக்கழகம் உ.வே.சா. வுக்கு டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது. • உ.வே.சா தமிழ் ஆசிரியராக கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகிய கல்லுாரிகளில் பணியாற்றினார். • சென்னை திருவான்மியூரில் உ.வே.சா. நூலகம் எங்கு அமைந்துள்ளது. • சென்னை மாநிலக் கல்லூரியில் உ.வே.சா-க்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. • இவர் இணையற்ற ஆசிரியர்; புலமைப் பெருங்கடல்; சிறந்த எழுத்தாளர்; பதிப்பாசிரியர்; பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர் என பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் ஆவார். • உ.வே.சா.வின் தொகுக்கப்பட்ட இலக்கியக் கட்டுரை உயிர்மீட்சி ஆகும். |
டி.கே. சிதம்பரநாதர் (7th New Tamil Book Unit 7) |
---|
• டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர்;
• தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்; • இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர். • இவர் தமது வீட்டில் 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார். • இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார். • பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரை இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது. |
இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர் (1882-1954) (11th New Tamil Book Unit 5) |
---|
• “தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்கமுடியும்” எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி.கே. சிதம்பாநாதர்.
• இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். • டி. கே. சி யின் வீட்டுக் கூடத்தில் டி.கே.சி. (1882-1954) வட்டவடிவமான தொட்டிக் கட்டில், ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய கூட்டம், இலக்கயித்தைப் பற்றிப்பேசியது. அவ்வமைப்பு 'வட்டத் தொட்டி' என்றே பெயர்பெற்றது. • டி.கே.சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர். • தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும். வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே. சி. விரும்பினார். • தமிழ்க்கலைகள், தமிழ் இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும் மேன்மையையும் தனித்தன்மையையும் எடுத்துச் சொன்னார். கடிதங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார். அவரதம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன. • இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்களும் முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம். • சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்த டி.கே.சி. ஏற்றிய இலக்கிய ஒளி தமிழ் அழகியலை வெளிச்சப்படுத்தியது. • வினாக்களுக்கு விடையளிக்க. 1. அன்று, அல்ல என்பவற்றுக்கான பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க. விடை - நான் கண்ட காட்சி அது அன்று. இவை நல்ல பழங்கள் அல்ல. 2. சொல்லச் சொல்ல, திளைப்பர் - இலக்கணக்குறிப்புத் தருக. விடை - சொல்லச் சொல்ல - அடுக்குத் தொடர்; திளைப்பர் - பலர்பால் வினைமுற்று. 3. ரசிகர் - தமிழ்ச்சொல் எழுதுக. மாநில மேலவை - ஆங்கிலக் கலைச்சொல் தருக. விடை -நேயர்; Legislative Council. 4. வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார். விடை- எத்தொழில் புரிவதை விட எவ்வின்பத்தில் திளைப்பதை டி.கே.சி விரும்பினார்? |
minnal vega kanitham