Type Here to Get Search Results !

தமிழ்ஒளி, தாராபாரதி, கி.வா.ஜகந்நாதன்


தமிழ்ஒளி (9th தமிழ் இயல் 2)
• கவிஞர் தமிழ்ஒளி (1924-1965) புதுவையில் பிறந்தவர்.
பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்:
• மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.
• இப்பாடப்பகுதி தமிழ் ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

தாராபாரதி
ஆசிரியர் குறிப்பு:
• கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.
ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் முதலியன இவர்தம் நூல்களுள் சில.
• இவர் வாழ்ந்த காலம் 26.02.194745 13.05.2000.
நூல் வெளி
• தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.
புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.
• இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

கி.வா.ஜகந்நாதன் (7th தமிழ் இயல் 7)
நூல் வெளி
• நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.
• இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.
• பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா.ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
• அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.