Type Here to Get Search Results !

uvamai

12th தமிழ் இயல் 1

உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக. 
தாமரை இலை நீர் போல, கிணற்றுத் தவளை போல, எலியும் பூனையும் போல, அச்சாணி இல்லாத தேர் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல. 

1. தாமரை இலை நீர் போல - பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்.
இவ்வுலக ஆசைகளின்மீது தாமரை இலை நீர் போல பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும். 

2. கிணற்றுத் தவளை போல - வெளி உலகம் தெரியாத நிலை.
இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர். 

3. எலியும் பூனையும் போல - எதிரிகளாக.
ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர். 

4. அச்சாணி இல்லாத தேர் போல - சரியான வழிகாட்டி.
நாட்டை வழி நடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர். 

5. உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படையாக, தெளிவாக. 
தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது.

பயிற்சி எண்ணங்களை 
1. பசுமரத்தாணி போல - எளிதாக
2. மடைதிறந்த வெள்ளம் போல - வேகமாக 
3. அடியற்ற மரம் போல - வலுவிழந்து
4. கல்மேல் எழுத்து போல - அழியாமல்
5. நகமும் சதையும் போல - இணை பிரியாமை
6. அடுத்தது காட்டும் பளிங்கு போல - வெளிப்படுத்த
7. இலவு காத்த கிளி போல - ஏமாற்றம்
8. அலை ஓய்ந்த கடல் போல - அமைதி
9. இஞ்சி தின்ற குரங்கு போல - விழித்தல்
10. கயிறற்ற பட்டம் போல - தவித்தல், வேதனை


கீழ்க்காணும் பத்தியில் உள்ள உருவகங்களையும் உவமைகளையும் பட்டியலிடுக. உருவகங்களை உவமைகளாக மாற்றுக. உவமைகளை எவ்வகை உவமைகள் என்று எழுதுக. (11th தமிழ் இயல் 4)
விழிச்சுடர் வாசலில் உட்கார்ந்திருந்தாள். அவளது எண்ணவலையில் மின்னல்களைப் போன்ற சொற்கள் தோன்றி மறைந்தன. அடுக்கிவைக்கப்படாத புத்தகங்களைப் போலக் குழம்பிய எண்ணங்களை ஒழுங்குபடுத்த நினைத்தாள். நேரம் நத்தையைப்போல மெதுவாக நகர்ந்தது. அண்ணாந்து பார்த்தாள். நீலப்பட்டு உடுத்தியதைப் போன்ற வானம் அம்மாவை நினைவூட்டியது. பூனைக்குட்டியைப்போல அம்மாவின் முந்தானைக்குள் சுருண்டுக்கொள்ள நினைத்தாள். பூனைக்குட்டியை மடியில் வைத்துக்கொண்டதைப்போல அம்மாவின் கதகதப்பை உணர்ந்தாள். பசிக்கயிற்றால் சுண்டிவிடப்பட்டவள், பூட்டியிருந்த வீட்டுக்கதவின் மேல் சாய்ந்தபடி அம்மாவின் வருகைக்காகக் காத்திருக்க தொடங்கினாள்.

விடை - உவமைகள்
மின்னல்களைப் போன்ற, நீலப்பட்டு உடுத்தியதைப் போன்ற, புத்தகங்களைப் போல, பூனைக்குட்டியைப்போல, நத்தையைப் போல, வைத்துக்கொண்டதைப் போல.


மரபுப் பிழை

தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. (12th தமிழ் இயல் 7)
1. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன. 

2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
முருகன் சோறு உண்டு பால் பருகினான். 

3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார். 
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான். 

4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக் குட்டியும் கண்டேன்.
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன். 

5. ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன. 

6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர். 


தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.