Type Here to Get Search Results !

விகிதம் மற்றும் விகிதாசாரம் (நேர் மற்றும் எதிர் விகிதங்கள்) Part - 11 (180+ நோக்கி பயணம்)

 

1) 3 புத்தகங்களின் விலை ₹ 90 எனில் 12 புத்தகங்களின் விலை. (7th New Book Back)

a. ₹ 300

b. ₹ 320

c. ₹ 360 ✔

d. ₹ 400


2) 8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________. (7th New Book)

a. ₹ 84✔

b. ₹ 85

c. ₹ 86

d. ₹ 87


3) மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ₹ 75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ₹105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார். (7th New Book)

a. 6

b. 7✔

c. 8

d. 5


4) ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை _______ (7th New Book Back)

a) 150

b) 70

c)100

d) 147✔

 

5) 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ______ முறை பயணம் செய்யலாம். (03-05-2023) (7th New Book Back)

(A) 8

(B) 9

(C) 10✔

(D) 12


6) 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரை யின் அளவு ____. (7th New book Back)

a. 9✔

b. 10

c. 15

d. 6


7) ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்? (6th New Book) [08-10-2022] (03-05-2023)

(A) 9 அலகுகள்✔

(B) 10 அலகுகள்

(C) 11 அலகுகள்

(D) 12 அலகுகள்


8) 24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல்கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு? (7th New Book)

a. 72✔

b. 82

c. 70

d. 52

9) ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தை படிக்கும் ஒருவர் 20 பக்கங்களை படிக்க 2 மணி நேரமாகிறது. அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களை படிக்க எவ்வளவு நேரமாகும்? [2022 Group 2]

a. 3 மணிநேரம்

b. 4 மணிநேரம்

c. 5 மணிநேரம்✔

d.4.5 மணிநேரம்


10) 12 மாணவர்களுக்குச் சீருடை வழங்க ₹3,000 செலவாகும் எனில் ₹1,250 க்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை? (20-05-2023)

(A) 6 மாணவர்கள்

(B) 8 மாணவர்கள்

(C) 5 மாணவர்கள்✔

(D) 7 மாணவர்கள்

 

11) அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ₹24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்? (7th New Book)

a. 102

b. 104

c. 108✔

d. 110

 

12) ஒரு மகிழுந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து 200 கி.மீ தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு _______. (7th New Book)

a. 8 லிட்டர்கள்

b. 9 லிட்டர்கள்

c. 10 லிட்டர்கள்✔

d. 11 லிட்டர்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.