பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
---|
நூல் வெளி
● பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன. ● தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார். ● இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார். ● இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது. ● இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. |
தேவநேயப் பாவாணர் |
---|
நூல் வெளி
● மொழி ஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் "சொல்லாய்வுக் கட்டுரைகள்" நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது. ● இக்கட்டுரையில் சில விளக்கக் குறிப்புகள் மாணவர்களின் புரிதலுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. ● பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர். ● செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்; உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர். |
இரா.இளங்குமரனார். |
---|
யார் இவர்?
● தமிழாசிரியர்; நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்; சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்திருப்பவர்; பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்; தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்; தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர். ● விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்; அதற்காக, தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்; இன்றளவும் இவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர். ● பற்பல நூல்களை எழுதியிருப்பினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியன இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துக்கள். அவர்தான் உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார். |
கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக. (குவியல், குலை, மந்தை, கட்டு) |
---|
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் எவ்வாறு வரும்? (அ) எந் + தமிழ் + நா (ஆ) எந் + தமிழ் = நா (இ) எம் + தமிழ் + நா (ஈ) எந்தம் + தமிழ் + நா [விடை: எம் + தமிழ் + நா] |
கலைச்சொல் அறிவோம் |
---|
● Vowel - உயிரெழுத்து
● Consonant - மெய்யெழுத்து ● Gomograph - ஒப்பெழுத்து ● Monolingual - ஒரு மொழி ● Conversation - உரையாடல் ● Discussion – கலந்துரையாடல் ● உச்சநிலை (climax) |
சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக. |
---|
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)
புதிய சொற்கள்: ● தேன்மழை; ● மணிவிளக்கு; ● மழைத்தேன்; ● விண்மணி; ● மணிமேகலை; ● பொன் விலங்கு; ● செய்வான்; ● வான்மழை; ● பொன்மணி; ● பொன்விளக்கு; ● பூமழை; ● பூமணி; ● பூவிலங்கு. |
வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக. |
---|
1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார். 3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர். 4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார். விடை : 1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள். 2. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார். 3. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர். 4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார். |
தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக. |
---|
1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
2. வள்ளல் குமணன் வறுமையால் வாடி வந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான். 3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர். 4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன. 5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும். விடை : 1. புவியில் வாழும் மானுடர்கள் சிலர் பழமிருக்கக் காய் உண்பதைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர். 2. வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த அறிஞர்களுக்குத் தனது தலையைக் ஈந்து மங்காப் பெருமை பெற்றான். 3. நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயிலை போலக் மகிழ்ச்சி கொண்டனர். 4. நந்தவனத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனைவுண்டன. 5. "ஆ" வைப் போல் - அமைதியும் வேங்கை போல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும். |
minnal vega kanitham