Type Here to Get Search Results !

Day 34 New syllabus அடிப்படையில் 9th தமிழ் இயல் - 8

0
சொற்றொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
1. மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார் (நேர் கூற்றாக மாற்றுக).
விடை : ''நான் நாளை வீட்டுக்கு வருவேன்'' என்று முரளி கூறினார்.
2. தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவை புகழ்கிறோம் என்று ஆசிரியர் கூறினார் (அயற் கூற்றாக மாற்றுக).
விடை : தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்.
3. மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான் (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக)
விடை : காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்).
4. அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் (ஒலி மரபுப் பிழைகளை திருத்துக).
விடை : அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.
5. கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளைத் திருத்துக).
விடை : கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.

சொல்லும் பொருளும்
விண் - வானம்;
ரவி - கதிரவன்;
கமுகு -பாக்கு
அறம் - நற்செயல்;
வெகுளி- சினம்;
ஞானம் - அறிவு;
விரதம் – மேற்கொண்ட நன்னெறி.
“ஞானம்” என்பதன் பொருள் யாது?
அ) தானம்
ஆ) தெளிவு
இ) சினம்
ஈ) அறிவு
விடை: ஈ) அறிவு

இலக்கணக் குறிப்பு
பிறவி இருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் - உருவகங்கள்.
பாண்டம் பாண்டமாக - அடுக்குத்தொடர்
வாயிலும் சன்னலும் - எண்ணும்மை

கலைச்சொல் அறிவோம்
எழுத்துச் சீர்திருத்தம் - (Reforming the letters)
பெரியாரால் தமிழ்மொழியில் ஏற்படுத்தப்பட்டது.
எழுத்துரு - (font)
அச்சில் எழுத்துக்களின் வடிவமைப்பு அளவைக் குறிப்பது.
மெய்யியல் - (philosophy)
வாழ்வியல் உண்மைகளைத் தத்துவ இலக்கியமாக, கருத்துகளாக கூறுவது.
அசை - (syllable)
சொல்லைப் பிரித்தல் (சீர் பிரித்தல்).
இயைபுத்தொடை - (Rhyme)
செய்யுளில் அடிதோறும் இறுதிச் சொல் அல்லது எழுத்து ஒன்றி வருவது.

விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
விடை: பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக.
விடை :
. வான்மீகி வடமொழியில் எழுதிய இராமகாதையைத் தழுவி கம்பர் “கம்பராமாயணம்” எழுதினார்.
. வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி, 'வில்லிபாரதம்', 'பாஞ்சாலி சபதம் எழுதப்பட்டது.
. ஷத்ரிய சூடாமணி, ஸ்ரீபுராணம், சத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி “சீவகசிந்தாமணி” எழுதப்பட்டது.
. Pilgrims progress நூலைத் தழுவி "இரட்சண்ய யாத்திரிகம் எழுதப்பட்டது.
. The secret way - என்னும் நூலைத் தழுவி" மனோன்மணியம் " எழுதப்பட்டது.
. புட்பந்தர் எழுதிய யசோதர சரிதம் என்னும் நூலைத் தழுவி “யசோதர காவியம்” எழுதப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்