Type Here to Get Search Results !

Day 33 New syllabus அடிப்படையில் 9th தமிழ் இயல் - 7

0
கலைச்சொல் அறிவோம்
இந்திய தேசிய இராணுவம் - Indian National Army
பண்டமாற்றுமுறை - Commodity Exchange
காய்கறி வடிசாறு - Vegetable Soup
செவ்வியல் இலக்கியம் - Classical Literature
கரும்புச் சாறு - Sugarcane Juice
தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways)
மாநில நெடுஞ்சாலைகள் (State Main Roads)
சிற்றூர்ச் சாலைகள் (Village Roads)

இலக்கணக் குறிப்பு
நற்றவம் - பண்புத்தொகைகள்;
செய்கோலம் - வினைத்தொகை;
தேமாங்கனி (தேன்போன்ற மாங்கனி) - உவமைத்தொகை
இறைஞ்சி - வினையெச்சம்.
கொடியனார் - இடைக்குறை
வெண்குடை, இளங்கமுகு - பண்புத் தொகைகள்
கொல்யானை, குவி மொட்டு - வினைத்தொகைகள்.
வெரீஇ - சொல்லிசையளபெடை
ஓங்கிய - பெயரெச்சம்;
நிலைஇய - சொல்லிசை அளபெடை;
குழாஅத்து - செய்யுளிசை அளபெடை;
வாயில் - இலக்கணப் போலி.
மா கால் - உரிச்சொல் தொடர்;
முழங்கிசை, இமிழிசை - வினைத்தொகைகள்.
நெடுநிலை, முந்நீர் - பண்புத் தொகைகள்;
மகிழ்ந்தோர் - வினையாலணையும் பெயர்.
இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக் குறிப்புத் தருக.
அ) உருவகத்தொடர், வினைத்தொகை
ஆ) பண்புத் தொகை, வினைத்தொகை
இ) வினைத்தொகை, பண்புத்தொகை
ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்
விடை: ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை

சொல்லும் பொருளும்:
தெங்கு - தேங்காய்;
இசை - புகழ்;
வருக்கை - பலாப்பழம்;
நெற்றி - உச்சி
மால்வரை - பெரியமலை;
மடுத்து - பாய்ந்து;
கொழுநிதி - திரண்ட நிதி
மருப்பு - கொம்பு;
வெறி – மணம்;
கழனி - வயல்;
செறி - சிறந்த;
இரிய - ஓட
சூல் - கரு
அடிசில் - சோறு;
மடிவு – சோம்பல்
கொடியனார் – மகளிர்
நற்றவம் - பெருந்தவம்;
வட்டம் - எல்லை;
வெற்றம் - வெற்றி
அள்ளல் - சேறு;
பழனம் - நீர் மிக்க வயல்;
வெரீஇ - அஞ்சி;
பார்ப்பு - குஞ்சு.
நாவலோ - நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து;
இசைத்தால் - ஆரவாரத்தோடு கூவுதல்.
நந்து - சங்கு;
கமுகு – பாக்கு.
முத்தம் - முத்து
புரிசை - மதில்;
அணங்கு - தெய்வம்;
சில்காற்று - தென்றல்;
புழை - சாளரம்;
மாகால் - பெருங்காற்று;
முந்நீர் - கடல்;
பணை - முரசு;
கயம் - நீர் நிலை;
ஓவு - ஓவியம்;
நியமம் - அங்காடி.
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை – இருக்கை
ஆ) புள் - தாவரம்
இ) அள்ளல் – சேறு
ஈ) மடிவு - தொடக்கம்
விடை : இ) அள்ளல் - சேறு

கருத்துரையிடுக

0 கருத்துகள்