பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) 'நன்செய்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன் + செய் ஆ) நன்று + செய் இ) நன்மை + செய் ஈ) நல் + செய் [விடை : இ) நன்மை + செய்] 2) 'நீளுழைப்பு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) நீளு + உழைப்பு ஆ) நீண் + உழைப்பு இ) நீள் + அழைப்பு ஈ) நீள் + உழைப்பு [விடை : ஈ) நீள் + உழைப்பு] 3) சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) சீருக்கு ஏற்ப ஆ) சீருக்கேற்ப இ) சீர்க்கேற்ப ஈ) சீருகேற்ப [விடை : ஆ) சீருக்கேற்ப] 4) ஓடை+ஆட - என்பதனைச் சேர்த்தெழுதல் கிடைக்கும் சொல் அ) ஓடைஆட ஆ) ஓடையாட இ) ஓடையோட ஈ) ஓடைவாட [விடை : ஆ) ஓடையாட] 5) 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது . அ) விழுந்த + அங்கே ஆ) விழுந்த + ஆங்கே இ) விழுந்தது + அங்கே ஈ) விழுந்தது + ஆங்கே [விடை : இ) விழுந்தது + அங்கே] 6) 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) செ + திறந்த ஆ) செத்து + திறந்த இ) செ + இறந்த ஈ) செத்து + இறந்த [விடை : ஆ) செத்து + திறந்த] 7) பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) பருத்திஎல்லாம் ஆ) பருத்தியெல்லாம் இ) பருத்தெல்லாம் ஈ) பருத்திதெல்லாம் [விடை : ஆ) பருத்தியெல்லாம்] 8) "இன்னோசை'' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) இன் + ஓசை அ) இனி + ஓசை இ) இனிமை + ஓசை ஈ) இன் + னோசை [விடை : இ) இனிமை + ஓசை] 9) பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) பால்ஊறும் ஆ) பாலூறும் இ) பால்லூறும் ஈ) பாஊறும் [விடை : ஆ) பாலூறும்] |
தொடர் வகைகள் |
---|
அறிந்து பயன்படுத்துவோம்.
தொடர் வகைகள் தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும். செய்தித் தொடர் ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும். (எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான். வினாத்தொடர் ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும் (எ.கா) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? விழைவுத் தொடர் ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும். (எ.கா.) இளமையில் கல். (ஏவல்) உன் திருக்குறள் நூலைத் தருக. (வேண்டுதல்) உழவுத்தொழில் வாழ்க. (வாழ்த்துதல்) கல்லாமை ஒழிக. (வைதல்) உணர்ச்சித் தொடர் உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும். (எ.கா.) அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! (உவகை) ஆ! புலி வருகிறது! (அச்சம்) பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்) ஆ! மலையின் உயரம்தான் என்னே! கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக. 1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். செய்தித்தொடர் 2. கடமையைச் செய். விழைவுத்தொடர் 3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! உணர்ச்சித் தொடர் 4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? வினாத்தொடர் தொடர்களை மாற்றுக. (வியப்பு) எ.கா: நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத் தொடராக மாற்றுக) நேற்று நம் ஊரில் மழை பெய்ததா? 1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக) விடை : என்னே , காட்டின் அழகு! 2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.) விடை : பூனையின் காலில் அடிபட்டுவிட்டது. 3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.) விடை : அதிகாலையில் துயில் எழு. 4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக) விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும். 5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.) விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா? |
கலைச்சொல் அறிவோம். |
---|
1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain 3. பள்ளத்தாக்கு – Valley 4. புதர் – Thicker 5. மலைமுகடு – Ridge 6. வெட்டுக்கிளி – Locust 7. சிறுத்தை – Leopard 8. மொட்டு – Bud |
வேர்ச்சொல்லை எழுதுக. |
---|
வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.
1. நடக்கிறது – நட 2. போனான் – போ 3. சென்றனர் – செல் 4. உறங்கினாள் – உறங்கு 5. வாழிய – வாழ் 6. பேசினாள் – பேசு 7. வருக – வா 8. தருகின்றனர் – தா 9. பயின்றாள் – பயில் 10. கேட்டார் – கேள் |
சொல்லும் பொருளும் |
---|
● தூண்டுதல் - ஆர்வம் கொள்ளுதல்
● ஈரம் - இரக்கம் ● முழவு - இசைக்கருவி ● பயிலுதல் - படித்தல் ● நாணம் - வெட்கம் ● செஞ்சொல் - திருந்திய சொல் ● நன்செய் - நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் ● புன்செய் - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் ● வன்னைப்பாட்டு - நெல்குத்தும்போது பாடப்படும் பாடல் ● முகில் - மேகம் ● கெடிகலங்கி - மிக வருந்தி ● சம்பிரமுடன் - முறையாக ● சேகரம் – கூட்டம் ● காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று ● வின்னம் - சேதம் ● வாகு – சரியாக ● காலன் – எமன் ● மெத்த – மிகவும் |
minnal vega kanitham