Type Here to Get Search Results !

Day 32 New syllabus அடிப்படையில் 9th தமிழ் இயல் - 6

0
மொழி பெயர்க்க:
1. Strengthen the body. : உடலினை உறுதி செய்
2. Love your food : ஊண் மிக விரும்பு
3. Thinking is great : எண்ணுவது உயர்வு
4. Walk like a bull. : ஏறு போல் நட
5. Union is strength : ஒற்றுமை வலிமையாம்
6. Practice what you have learnt : கற்றது ஒழுகு
இவை அனைத்தும் “பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி”

மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க:
எட்டாக்கனி , உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத்தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்.
● எ.கா: எட்டாக்கனி : முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.
● உடும்புப்பிடி : என் தம்பிக்கு பிடிவாத குணமாத்தால் பிடித்தால் உடும்புப்பிடிதான்.
● கிணற்றுத் தவளை : கிணற்றுத் தவளை போல் உன் வாழ்வை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளாதே! (அல்லது) கிணற்றுத் தவளை போல் எதுவும் தெரியாமல் இருக்காதே.
● ஆகாயத்தாமரை : ஆகாயத் தாமரையைப் பறிக்க விரும்புவது போல் இல்லாத ஒன்றை விரும்பி ஏற்காதே.
● எடுப்பார் கைப்பிள்ளை : என் நண்பன் எடுப்பார் கைப்பிள்ளை போல் யார் எதனைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வான்; நம்பி விடுவான்.
● மேளதாளத்துடன் : எம் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சரை மேளதாளத்துடன் வரவேற்றோம்.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
விடை: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
2. கயல்பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.
விடை : கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.
3. நேற்று தென்றல் காற்று அடித்தது.
விடை : நேற்று தென்றல் வீசியது
4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
விடை : தென்னங்கீற்றில் இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்)
5. அணில் பழம் சாப்பிட்டது
விடை : அணில் பழம் தின்றது
6 .கொடியிலுள்ள மலரை எடுத்து வா.
விடை : கொடியில் உள்ள மலரைக் கொய்து வா. (அல்லது) கொடியில் உள்ள பூக்களைப் பறித்து வா?

உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

1. மலர்விழி வீணை வாசித்தாள்: கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
விடை: மலர்விழி வீணை வாசித்தாள். கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்
2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
விடை: குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலைக்கடலில் இருந்து நீங்கினர்.
3. தேன் போன்ற மொழியைப் பவள வாய் திறந்து படித்தாள்
விடை: பவளவாய் திறந்து மொழித்தேனைப் படித்தாள்.
4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
விடை: முத்துநகை தன் புருவவில்லில் மை தீட்டினாள்.

கலைச்சொல் அறிவோம்
குடைவரைக்கோயில் - (Cave temple)
பெரிய மலை (வரை) களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்களைக் குறிப்பது
கருவூலம் - (Treasury) அரசின் செல்வம் மற்றும் நிதி சார்ந்த அனைத்தும் பாதுகாக்கப்படும் இடம்.
மதிப்புறு முனைவர் - (Honorary Doctorate) தொழில் துறை, கலை, அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றி வாழ்நாள் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் கௌரவ பட்டம்.
மெல்லிசை - (melody) இனிமையான இசையை மென்மையாக வெளிப்படுத்துதல்
ஆவணக் குறும்படம் - (Document short film) ஒரு சமூகப் பிரச்சனை, அதன் தீவிரம் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை குறைந்த நேரத்தில் மக்கள் மனதில் பதியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் படம்.
புணர்ச்சி - (combination) தமிழ் இலக்கணத்தில் இடம்பெறுவது. ஒரு சொல்லைப் பிரித்து நிலைமொழியும் வருமொழியும் எவ்வாறு இணைகின்றன என்பதைக் கூறும் இலக்கணம்.

இலக்கணக் குறிப்பு
● பைங்கிளி - பண்புத்தொகை;
● பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும்எண்ணும்மைகள், இன்னிளங் குருளை - பண்புத்தொகை;
● அதிர் குரல் - வினைத்தொகை;
● மன்னிய- பெயரெச்சம்;
● வெரீஇ- சொல்லிசை அளபெடை;
● கடிகமழ்உரிச்சொற்றொடர்; மலர்க்கண்ணி- மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை;
● எருத்துக்கோடு- ஆறாம் வேற்றுமைத்தொகை;
● கரைபொரு- இரண்டாம் வேற்றுமைத் தொகை;
● மரைமுகம்- உவமைத்தொகை;
● கருமுகில் - பண்புத்தொகை;
● வருமலை- வினைத்தொகை;
● முத்துடைத்தாமம் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
● இடிகுரல் - உவமைத் தொகை
● பெருங்கடல் - பண்புத் தொகை

சொல்லும் பொருளும்:
● மைவனம் - மலைநெல்;
● முருகியம்- குறிஞ்சிப்பறை;
● பூஞ்சினை-பூக்களை உடைய கிளை;
● சிறை- இறகு;
● சாந்தம் - சந்தனம்
● பூவை- நாகணவாய்ப் பறவை;
● பொலம்- அழகு;
● கடறு- காடு;
● முக்குழல்-கொன்றை , ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
● பொலி- தானியக்குவியல்;
● உழை- ஒரு வகை மான்.
● வாய்வெரீஇ- சோர்வால் வாய் குழறுதல்;
● குருளை- குட்டி;
● இனைந்து- துன்புறுதல்;
● உயங்குதல்- வருந்துதல்.
● படிக்குஉற- நிலத்தில் விழ;
● கோடு- கொம்பு;
● கல்-மலை;
● முருகு- தேன், மணம், அழகு;
● மல்லல்- வளம்;
● செறு- வயல்;
● கரிக்குருத்து - யானைத்தந்தம்;
● போர்- வைக்கோற்போர்;
● புரைதப- குற்றமின்றி.
● தும்பி- ஒருவகை வண்டு;
● துவரை-பவளம்;
● மரை- தாமரை மலர்;
● விசும்பு- வானம்;
● மதியம்-நிலவு.
● தீபம் - விளக்கு;
● சதிர் - நடனம்;
● தாமம் - மாலை
தெரிந்து தெளிவோம்
● கோர்வை கோவை : கோ என்பது வேர்ச்சொல். கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி. (எ.கா.) ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்
தெரிந்து தெளிவோம்
சிறுகதை - விருது மாலை
சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்
● 1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
● 1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
● 1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
● 1996 - அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
● 2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
● 2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
● 2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்
இதேபோல் மற்றவகை இலக்கியப் படைப்புகளுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்க.

bbbbbbbbbbbbbbb
● மெய் + மயக்கம் = மெய்ம்ம யக்கம்
● மெய் + ஞானம் = மெய்ஞ்ஞானம்
● செய் + நன்றி = செய்ந்நன்றி
● வேய் + குழல் = வேய்ங்குழல்
● கூர் + சிறை = கூர்ஞ்சிறை
● பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு
● புளி + கறி = புளிங்கறி
● புளி + சோறு = புளிஞ்சோறு
● மா + பழம் = மாம்பழம்
● விள + காய் = விளங்காய்
● பூ + கொடி = பூங்கொடி
● பூ + சோலை = பூஞ்சோலை
● பூ + தொட்டி = பூந்தொட்டி
● கலை + அழகு – உயிரீறு
● மண் + குடம் – மெய்யீறு
● வாழை + இலை – உயிர்முதல்
● வாழை + மரம் – மெய்ம்முதல்
● மணி (ண்+இ) + அடி = மணியடி
● பனி + காற்று = பனிக்காற்று
● ஆல் + இலை = ஆலிலை
● மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை
● வாழை + மரம் = வாழைமரம்
● செடி + கொடி = செடிகொடி
● மண் + மலை = மண்மலை
● நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு (தோன்றல்)
● கல்லூரி + சாலை = கல்லூரிச்சாலை (தோன்றல்)
● பல் + பசை = பற்பசை (திரிதல்)
● புறம் + நானூறு = புறநானூறு (கெடுதல்)
● மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு
● தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி
● ஓடை + ஓரம் = ஓடை + ய் + ஓரம் = ஓடையோரம்
● பல + உயிர் = பல + வ் + உயிர் = பலவுயிர்
● பா + இனம் = பா + வ் + இனம் = பாவினம்
● சே + அடி = சே + ய் + அடி = சேயடி;
● சே + வ் + அடி = சேவடி
● தே + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம்
● இவனே + அவன் = இவனே +ய் + அவன் = இவனேயவன்
புணர்ச்சிகளை “முதல், ஈற்றுச்” சொல் வகையால் பொருத்துக.
1. செல்வி + ஆடினாள் - அ) மெய்யீறு + மெய்ம் முதல்
2. பாலை + திணை - ஆ) மெய்யீறு + உயிர் முதல்
3. கோல் + ஆட்டம் - இ) உயீரிறு + உயிர் முதல்
4. மண் + சரிந்தது - ஈ) உயிரீறு + மெய்ம் முதல்
விடை: 1) இ, 2) ஈ, 3) ஆ, 4) அ
சேர்த்து எழுதுக:
அ) தமிழ் + பேசு - தமிழ் பேசு
ஆ) தமிழ் + பேச்சு - தமிழ்ப்பேச்சு
இ) கை + கள் - கைகள்
1. தொன்மை +ஆன = தொன்மையான
2. நூல் + ஆகிய = நூலாகிய
3. தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்
4. சிற்பம் + கலை = சிற்பக்கலை
5. அ + கல்லில் = அக்கல்லில்
6. தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை
7. இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம்
8. கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை
9. சுதை + சிற்பங்கள் = சுதை சிற்பங்கள்
10. அறிய + முடிகிறது = அறிய முடிகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்