Type Here to Get Search Results !

உயர்திணை அஃறிணை

0
பால் ஐந்து வகைப்படும் (7th தமிழ் இயல் - 2)

1. ஆண்பால்
2. பெண்பால்
3. பலர்பால்
4. ஒன்றன்பால்
5. பலவின்பால்
அஃறிணை
ஒன்றன்பால்
ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால் (சான்று: கல், பசு)
பலவின்பால்
ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால் (சான்று: மண் புழுக்கள், பசுக்கள் )
உயர்திணை
ஆண்பால்
ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால் (சான்று: மாணவன், செல்வன்)
பெண்பால்

ஓர் பெண்ணைக் குறிப்பது பெண்பால் (சான்று: ஆதினி, மாணவி)
பலர்பால்

ஒன்றுக்கு மேற்பட்டவர்களை குறிப்பது பலர் பால் (சான்று: மாணவர்கள், மக்கள்)

எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக. (7th தமிழ் இயல் - 2)
1. மகளிர் X ஆடவர்
2. அரசன் X அரசி
3. பெண் X ஆண்
4. மாணவன் X மாணவி
5. சிறுவன் X சிறுமி
6. தோழி X தோழன்

உயர்திணை அஃறிணை (7th தமிழ் இயல் - 1)
கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.
வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்.
உயர்திணை
முகிலன், கயல்விழி, தலைவி, ஆசிரியர், சுரதா
அஃறிணை
வயல், குதிரை, கடல், புத்தகம், மரம்
தொகைச் சொற்களை விரித்து எழுதுக.
(எ.கா) இருதிணை - உயர்திணை, அஃறிணை.
முக்கனி - மா, பலா, வாழை.
முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.
நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.
ஐவகைநிலம் - குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை.
அறுசுவை - இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்