Type Here to Get Search Results !

Day 11 New syllabus அடிப்படையில் 7th தமிழ் இயல் - 2

0
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) 'காடெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------
அ) காடு + டெல்லாம்
ஆ) காடு + எல்லாம்
இ) கா + டெல்லாம்
ஈ) கான் + எல்லாம்
[விடை : ஆ. காடு + எல்லாம்]
2) ‘கிழங்கு + எடுக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் --------

அ) கிழங்கு எடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்
[விடை : ஆ. கிழங்கெடுக்கும்]
3) ‘பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) பெயர + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர + அறியா
[விடை : இ. பெயர் + அறியா]
4) ‘மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________

அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
[விடை : ஈ. மனம் + இல்லை]
5) “நேற்று + இரவு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
[விடை : ஆ. நேற்றிரவு]
6) ‘காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) காடு + ஆறு
ஆ) காட்டு + ஆறு
இ) காட் + ஆறு
ஈ) காட் + டாறு
[விடை : அ. காடு + ஆறு]
7) 'அனைத்துண்ணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) அனைத்து + துண்ணி
ஆ) அனை + உண்ணி
இ) அனைத் + துண்ணி
ஈ) அனைத்து + உண்ணி
[விடை : ஈ. அனைத்து + உண்ணி]
8) ‘நேரம் + ஆகி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) நேரமாகி
ஆ) நேராகி
இ) நேரம்ஆகி
ஈ) நேர்ஆகி
[விடை : அ. நேரமாகி]
9) ‘வேட்டை + ஆடிய' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) வேட்டைஆடிய
ஆ) வேட்டையாடிய
இ) வேட்டாடி
ஈ) வேடாடிய
[விடை : ஆ. வேட்டையாடிய ]
சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.

எ.கா : வாழை + காய் - வாழைக்காய்
1. குருவி + கூடு - குருவிக்கூடு
2. விளையாட்டு + திடல் - விளையாட்டுத்திடல்
3. தயிர் + சோறு - தயிர்ச்சோறு
4. கொய்யா + பழம் - கொய்யாப்பழம்
5. விளையாட்டு + போட்டி - விளையாட்டுப்போட்டி
6. அவரை + காய் - அவரைக்காய்

பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.
எ.கா : கண்ணகி சிலம்பு அணிந்தான்.
விடை : கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
1. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.
கோவலன் சிலம்பு விற்கப் போனான்.
2. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.
அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.
3. பசு கன்றை ஈன்றன.
பசு கன்றை ஈன்றது.
4. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
மேகங்கள் சூழ்ந்து கொண்டன.
5. குழலி நடனம் ஆடியது.
குழலி நடனம் ஆடினாள்.

கலைச்சொல் அறிவோம்
• தீவு - Island
• இயற்கை வளம் - Natural Resource
• வன விலங்குகள் - Wild Animals
• வனப் பாதுகாவலர் - Forest Conservator
• உவமை - Parable
• காடு - Jungle
• வனவியல் - Forestry
• பல்லுயிர் மண்டலம் - Bio Diversity

பால் ஐந்து வகைப்படும்

1. ஆண்பால்
2. பெண்பால்
3. பலர்பால்
4. ஒன்றன்பால்
5. பலவின்பால்
அஃறிணை
ஒன்றன்பால்
ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால் (சான்று: கல், பசு)
பலவின்பால்
ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால் (சான்று: மண் புழுக்கள், பசுக்கள் )
உயர்திணை
ஆண்பால்
ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால் (சான்று: மாணவன், செல்வன்)
பெண்பால்

ஓர் பெண்ணைக் குறிப்பது பெண்பால் (சான்று: ஆதினி, மாணவி)
பலர்பால்

ஒன்றுக்கு மேற்பட்டவர்களை குறிப்பது பலர் பால் (சான்று: மாணவர்கள், மக்கள்)

எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.
1. மகளிர் X ஆடவர்
2. அரசன் X அரசி
3. பெண் X ஆண்
4. மாணவன் X மாணவி
5. சிறுவன் X சிறுமி
6. தோழி X தோழன்

சொல்லும் பொருளும்
• ஈன்று - தந்து
• கொம்பு - கிளை
• அதிமதுரம் - மிகுந்த சுவை
• களித்திட - மகிழ்ந்திட
• நச்சரவம் - விடமுள்ள பாம்பு
• விடுதி - தங்கும் இடம்
• பரவசம் - மகிழ்ச்சிப் பெருக்கு
• துஷ்டி கேட்டல் - துக்கம் விசாரித்தல்

bbbbbbbbbbbbbbb
nnnnnnnnnnnnnnnnnnnnnn

கருத்துரையிடுக

0 கருத்துகள்