Type Here to Get Search Results !

ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள், ஒருபொருள் தரும் பல சொற்கள் || அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)

0
இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக. (7th தமிழ் இயல் - 6)
(எ.கா) மாலை - மலர் மாலை, அந்திப்பொழுது.
ஆறு – எண், நதி
அன்னம் – சோறு, பறவை
மதி - அறிவு, நிலவு
நகை - புன்னகை, அணிகலன்
மெய் - உடல், உண்மை
திங்கள் - மாதம், நிலவு
மாடு - விலங்கு, செல்வம்
தை - மாதம், தைத்தல்
பார் - உலகம், பார்த்தல்
திரை - கடல் அலை, திரைச்சீலை
படி - படித்தல், படிக்கட்டு
இசை - புகழ், சங்கீதம்
வேங்கை - மரம், விலங்கு
கிளை - மரக்கிளை, உறவு
மா - மாமரம், பெரிய
மறை - மறைத்தல், வேதம்


பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக. (7th தமிழ் இயல் - 5)
ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி
(எ.கா.) ஆறு - ஈ ஆறு கால்களை உடையது.
தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது.
1. விளக்கு - பாடலின் பொருள் விளங்கியது.
அகல் விளக்கைக் கோவிலில் ஏற்றுவர்.
2. படி - வாயிற் படியில் அமராதே!
இளமையிலேயே படிக்க வேண்டும்.
3. சொல் - மூத்தோர் சொல் அமுதம்.
தஞ்சை சொல்(நெல்) வளம் மிகுந்தது.
4. கல் - காய்த்த மரம் கல் அடிபடும்.
இளமையில் கல்.
5. மாலை - மாலைநேரத்தில் விளையாட வேண்டும்.
பூமாலை தொடுத்தாள்.
6. இடி - இடி மின்னலுடன் மழை பெய்தது.
மரத்தின் மீது வண்டி இடித்துவிட்டது.


இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக. (7th தமிழ் இயல் - 1)
1. அரசுக்கு தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.
2. மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத் தமிழ் மொழி எமது.
3. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை நடை பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை.
4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.
எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்.
5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் சென்றனர்.
குழந்தையை மெதுவாக நட என்போம்.
6. நீதி மன்றத்தில் தொடுப்பது வழக்கு.
'நீச்சத் தண்ணி குடி' என்பது பேச்சு வழக்கு.

சொல் வளம் பெறுவோம். (6th தமிழ் இயல் - 1)
1. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா.) கரும்பு – கரு, கம்பு
கவிதை – கவி, விதை, கதை, தை
பதிற்றுப்பத்து – பதி, பத்து, பற்று
பரிபாடல் – பரி, பாடல், பா, பால், பாரி
2. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்
(எ.கா.) விண்மீன்
விடை





• விண்மீன்
• மணிமாலை
• நீதிநூல்
• விண்வெளி
• தமிழ்மாலை
• கண்மணி
• எழுதுகோல்
• தமிழ்மொழி
• தமிழ்நூல்
• நீதிமொழி
• நீதிமணி
• மணிமொழி
• மீன்கண்
• நீதிமாலை
• தமிழ்வெளி

புதிய சொற்களை உருவாக்குக (6th தமிழ் இயல் - 3)
அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா.) அறி -அறிக, அறிந்து, அறிஞர், அறிவியல், அறிவிப்பு
1. பார் : பார்க்க, பார்த்து, பார்வை, பார்க்கவி, பார்க்கவன்,
2. செய் : செய்க, செய்து, செய்வார், செய்வான், செய்தல், செய்தி, செய்யுள்
3. தெளி : தெளிந்து, தெளிவு, தெளிதல், தெளித்தல், தெளிவாக, தெளிக்க
4. படி : படித்து, படிக்க, படித்தல், படிந்து, படிப்பு, படிவம், படிகை.

புதிய சொற்களை உருவாக்குங்கள். (6th தமிழ் இயல் - 4)
'கல்விக்கண் திறந்த காமராசர்' இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்திப் புதிய சொற்களை உருவாக்குங்கள். (எ.கா.) கண்
விடை
1. கல்வி
2. கவி
3. கதி
4. ராசர்
5. விண்
6. திற
7. கா
8. வில்
9. கல்
10. திறந்த

முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
1. முளையிலே விளையும் தெரியும் பயிர்
விடை - விளையும் பயிர் முளையிலே தெரியும்
2. ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை
விடை - கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.
இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள். (நூல்,மாலை,ஆறு,படி)
(எ.கா.) ஆடை தைக்க உதவுவது நூல், மூதுரை அற நூல்


விடை :
1. மாலை –
i) திருமாலுக்கு அணிவிப்பது துளசி மாலை.
ii) மாலை வெயில் உடலுக்கு நல்லது.
2. ஆறு –
i) சுவைகள் மொத்தம் ஆறு.
iI) வைகையாற்றின் துணையாறுகளுள் ஒன்று மஞ்சளாறு.
3. படி –
i) நூலை எடுத்துப் படி.
ii) மேலே ஏறுவதற்குப் பயன்படுவது படி.
பின்வரும் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குங்கள்.
விடை

(i) ஆசிரியர் கவிதை எழுதுகிறார்.
(ii) மாணவன் கவிதை எழுதுகிறான்.
(iii) ஆசிரியர் பாடம் படிக்கிறார்.
(iv) மாணவன் பாடம் படிக்கிறான்.
(v) ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்.

இருபொருள் தருக (6th தமிழ் இயல் - 8, 9)
இருபொருள் தருக.
(எ.கா.)
ஆறு – நதி
ஆறு – எண்
1. திங்கள்
திங்கள் – கிழமை, மாதம், நிலவு
2. ஓடு
ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது
3. நகை
நகை – அணிகலன், புன்னகை

புதிர்ச் சொல் கண்டுபிடி
1. இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
விடை : அறம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்