Type Here to Get Search Results !

Day 15 New syllabus அடிப்படையில் 7th தமிழ் இயல் - 6

0
இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக.
(எ.கா) மாலை - மலர் மாலை, அந்திப்பொழுது.
ஆறு – எண், நதி
அன்னம் – சோறு, பறவை
மதி - அறிவு, நிலவு
நகை - புன்னகை, அணிகலன்
மெய் - உடல், உண்மை
திங்கள் - மாதம், நிலவு
மாடு - விலங்கு, செல்வம்
தை - மாதம், தைத்தல்
பார் - உலகம், பார்த்தல்
திரை - கடல் அலை, திரைச்சீலை
படி - படித்தல், படிக்கட்டு
இசை - புகழ், சங்கீதம்
வேங்கை - மரம், விலங்கு
கிளை - மரக்கிளை, உறவு
மா - மாமரம், பெரிய
மறை - மறைத்தல், வேதம்

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) ‘வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ________
அ) வனம் + இல்லை
ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஈ) வனப் + பில்லை
[விடை : ஆ. வனப்பு + இல்லை]

2) ‘வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) வார்ப்எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்பு எனில்
[விடை : இ. வார்ப்பெனில்]

3) ‘வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) வண் + கீரை
ஆ) வண்ணம் + கீரை
இ) வளம் + கீரை
ஈ) வண்மை + கீரை
[விடை : ஈ. வண்மை + கீரை]

4) கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கட்டியிடித்தல்
ஆ) கட்டியடித்தல்
இ) கட்டி அடித்தல்
ஈ) கட்டு அடித்தல்
[விடை : ஆ. கட்டியடித்தல்]

5) 'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------
அ) கோடு + ஓவியம்
ஆ) கோட்டு + ஓவியம்
இ) கோட் + டோவியம்
ஈ) கோடி + ஓவியம்
[விடை : ஆ. கோட்டு + ஓவியம்]

6) ‘செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ) செப்பு + ஈடு
ஆ) செப்பு + ஓடு
இ) செப்பு + ஏடு
ஈ) செப்பு + யேடு
[விடை : இ. செப்பு + ஏடு]

7) எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் –
அ) எழுத்துஆணி
ஆ) எழுத்தாணி
இ) எழுத்துதாணி
ஈ) எழுதாணி
[விடை : ஆ. எழுத்தாணி]

8) ‘எழுத்தென்ப்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) எழுத்து + தென்ப
ஆ) எழுத்து + என்ப
இ) எழுத்து + இன்ப
ஈ) எழுத் + தென்ப
[விடை : ஆ. எழுத்து + என்ப]

9) 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) கரைந்து + இன்னும்
ஆ) கரை + துண்ணும்
இ) கரைந்து + உண்ணும்
ஈ) கரை + உண்ணும்
[விடை : இ. கரைந்து + உண்ணும்]

10) கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ________
அ) கற்றனைத்தூறும்
ஆ) கற்றனைதூறும்
இ) கற்றனைத்தீரும்
ஈ) கற்றனைத்தோறும்
[விடை : அ. கற்றனைத்தூறும்]

கலைச்சொல் அறிவோம்
• படைப்பாளர் - creator
• சிற்பம் - sculpture
• கலைஞர் - artist
• கல்வெட்டு - inscriptions
• கையெழுத்துப்படி - manuscripts
• அழகியல் - aesthetics
• தூரிகை - brush
• கருத்துப்படம் - cartoon
• குகை ஓவியங்கள் - cave paintings
• நவீன ஓவியம் - modern art

சொல்லும் பொருளும்
• பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்
• நெடி - நாற்றம்
• மழலை - குழந்தை
• வனப்பு - அழகு
• பூரிப்பு - மகிழ்ச்சி
• மேனி - உடல்
• வண்கீரை - வளமான கீரை
• முட்டப்போய் - முழுதாகச் சென்று
• மறித்தல் - தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
• பரி - குதிரை
• கால் - வாய்க்கால், குதிரையின் கால்
‘ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் ‘பரி' என்பதன் பொருள் ________
அ) யானை
ஆ) குதிரை
இ) மான்
ஈ) மாடு
[விடை : ஆ. குதிரை]

இடைச்சொல் ‘ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.
(எ.கா.) வீடு கட்டினான் - வீடு + ஐ + கட்டினான் = வீட்டைக் கட்டினான்
1. கடல் பார்த்தான் - கடல் + ஐ + பார்த்தான் = கடலைப் பார்த்தான்
2. புல் தின்றது - புல் + ஐ + தின்றது = புல்லைத் தின்றது
3. கதவு தட்டும் ஓசை - கதவு + ஐ + தட்டும் + ஓசை = கதவைத் தட்டும் ஓசை
4. பாடல் பாடினாள் - பாடல் + ஐ + பாடினாள் = பாடலைப் பாடினாள்
5. அறம் கூறினார் - அறம் + ஐ + கூறினார் = அறத்தைக் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்