ஒளவையார் |
---|
1. எந்த மன்னனின் அன்பினால் ஒளவையார் அரன்மண்ணையிலேயே தங்கிவிட்டார்?
அதியமான்
2. கரும்பை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தவர்கள் யார்? அதியமானின் முன்னோர்கள் 3. அதியமான் அறிய நெல்லிக்கனியை யாருக்கு வழங்கினார்? ஒளவையார் 4. நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய நீ இதனை உண்ணாமல் எனக்கு கொடுத்துவிட்டாயே என்று ஒளவையர் யாரிடம் கூறினார்? அதியமானிடம் 5. என்னைப்போன்று ஓர் அரசன் இறந்துபோனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது எனக் ஒளவையாரிடம் கூறியவர்? அதியமான் 6. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கி"என்ற பாடல் வரியை பாடியவர் யார்? ஒளவையார் 7. அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார்? ஓளவையார் 8. தொண்டைமான் யார் மீது படையெடுக்க ஆயத்தமானான்? அதியமான் 9. அதியமான் போரை ஏன் விரும்பவில்லை? நிறைய மனித இழப்புகள் ஏற்படும் 10. தொண்டைமானிடம் பேசி போரை தடுத்து நிறுத்தியவர் யார்? ஒளவையார் 11. தொண்டைமானிடம் படைக்கருவிகள் எவ்வாறு காட்சியளித்தன? புத்தம் புதிதாய், நெய் பூசப்பட்டடு இருந்தது 12. ஒளவையார் தொண்டைமானிடம் அதியமான் போர்க்கருவிகள் பற்றிக் கூறியது என்ன? நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் இருக்கும் (அடிக்கடி போர் புரிவதால்) 13. ஒளவாரியாரின் சொல்லின் உட்பொருளை அறிந்து கொண்டு போர் வேண்டாம் என்று முடிவு செய்தவன் யார்? தொண்டைமான் |
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) 'வெங்கரி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வெம் + கரி ஆ) வெம்மை + கரி இ) வெண் + கரி ஈ) வெங் + கரி [விடை : ஆ) வெம்மை + கரி] 2) 'என்றிருள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது . அ) என் + இருள் ஆ) எட்டு + இருள் இ) என்ற + இருள் ஈ) என்று + இருள் [விடை : ஆ) எட்டு + இருள்] 3) போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) போன்றன ஆ) போலன்றன இ) போலுன்றன ஈ) போல்உடன்றன [விடை : இ) போலுன்றன] 4) 'சீவனில்லாமல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ) சீவ + நில்லாமல் ஆ) சீவன் + நில்லாமல் இ) சீவன் + இல்லாமல் ஈ) சீவ + இல்லாமல் [விடை : ஆ) சீவன் + நில்லாமல்] 5) 'விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ) விலம் + கொடித்து ஆ) விலம் + ஓடித்து இ) விலன் + ஒடித்து ஈ) விலங்கு + ஓடித்து [விடை : ஈ) விலங்கு + ஓடித்து] 6) காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) காட்டைஎரித்து ஆ) காட்டையெரித்து இ) காடுஎரித்து ஈ) காடுயெரித்து [விடை : ஆ) காட்டையெரித்து] 7) இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) இதந்தரும் ஆ) இதம்தரும் இ) இருத்திரும் ஈ) இதைத்தரும் [விடை : அ) இதந்தரும்] |
சொல்லும் பொருளும் |
---|
❖ மறவி - காலன்
❖ வழிவர் - நழுவி ஓடுவர் ❖ கரி - யானை ❖ தூறு - புதர் ❖ பிலம் - மலைக்குகை ❖ மண்டுதல் - நெருங்குதல் ❖ அருவர் - தமிழர் ❖ இறைஞ்சினர் - வணங்கினர் ❖ உடன்றன - சினந்து எழுந்தன ❖ முழை - மலைக்குகை ❖ சீவன் - உயிர் ❖ சத்தியம் - உண்மை ❖ ஆனந்த தரிசனம் - மகிழ்வான காட்சி ❖ வையம் - உலகம் ❖ சபதம் - சூளுரை ❖ மோகித்து – விரும்பி |
எதிர்மறைச் சொற்கள் |
---|
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல, நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
தன்மை ❖ ஒருமை - நான் அல்லேன். ❖ பன்மை - நாம் அல்லோம். முன்னிலை ❖ ஒருமை - நீ அல்லை. ❖ பன்மை - நீவீர் அல்லீர், படர்க்கை ❖ ஆண்பால் - அவன் அல்லன். ❖ பெண்பால் - அவள் அல்லள். ❖ பலர்பால் - அவர் அல்லர், ❖ ஒன்றன்பால் - அஃது அன்று. ❖ பலவின் பால் - அவை அல்ல. ❖ 'வேறு, உண்டு, இல்லை' - ஆகியவை மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும். பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக. 1. அதைச் செய்தது நான் அன்று. விடை : அதைச் செய்தது நான் அல்லேன். 2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல. விடை : பானையை உடைத்தது கண்ணன் அல்லன். 3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை. விடை : மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்ற. 4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம். விடை : சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர். 5. பகைவர் நீவீர் அல்லர். விடை : பகைவர் நீவீர் அல்லீர். |
சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக. |
---|
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை அல்ல
2. உங்களோடு வருவோர் நாம் அல்லோம். 3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் அல்லள் 4. மொய்த்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன அன்ற 5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் நீ அல்லை. |
கலைச்சொல் அறிவோம். |
---|
1. குதிரையேற்றம் – Equestrian
2. கதாநாயகன் – The Hero 3. முதலமைச்சர் – Chief Minister 4. தலைமைப்பண்பு – Leadership 5. ஆதரவு – Support 6. வரி – Tax 7. வெற்றி – Victory 8. சட்டமன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly |
சந்திப்பிழை |
---|
1. சந்திப்பிழை என்றால் என்ன?
விடை: வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுவதுவதும் மிகக்கூடாத இடத்தில் வல்லின மெய்இட்டு எழுதுவதும் தவறாகும். இது சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை எனப்படும். |
Pritheluthuga 2 qus ans wrong ah irukku anna
பதிலளிநீக்குminnal vega kanitham