திருக்குறள் |
---|
நூல் வெளி
● பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர். ● திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். ● இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. ● அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. ● பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. ● இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது. 1) 'வருமுன்னர்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி அ) தற்குறிப்பேற்ற அணி ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி இ) உவமை அணி ஈ) உருவக அணி [விடை : இ) உவமை அணி]
2) புகழாலும் பழியாலும் அறியப்படுவது அ) அடக்கமுடைமை ஆ) நாணுடைமை இ) நடுவுநிலைமை ஈ) பொருளுடைமை [விடை : இ) நடுவுநிலைமை]
3) பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் அ) வலிமையற்றவர் ஆ) கல்லாதவர் இ) ஒழுக்கமற்றவர் ஈ) அன்பில்லாதவர் [விடை : ஆ) கல்லாதவர்]
|
கலைச்சொல் அறிவோம். |
---|
1. பழங்குடியினர் – Tribes
2. சமவெளி – Plain 3. பள்ளத்தாக்கு – Valley 4. புதர் – Thicker 5. மலைமுகடு – Ridge 6. வெட்டுக்கிளி – Locust 7. சிறுத்தை – Leopard 8. மொட்டு – Bud |
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
1) 'இவையுண்டார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இ + யுண்டார் ஆ) இவ் + உண்டார் இ) இவை + உண்டார் ஈ) இவை + யுண்டார் [விடை : இ) இவை + உண்டார்]
2) தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) தாம்இனி ஆ) தாம்மினி இ) தாமினி ஈ) தாமனி [விடை : இ) தாமினி]
3) 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது . அ) விழுந்த + அங்கே ஆ) விழுந்த + ஆங்கே இ) விழுந்தது + அங்கே ஈ) விழுந்தது + ஆங்கே [விடை : இ) விழுந்தது + அங்கே]
4) 'நலமெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____ அ) நலம் + எல்லாம் இ) நலம் + எலாம் ஆ) நலன் + எல்லாம் ஈ) நலன் + எலாம் [விடை : அ) நலம் + எல்லாம்]
5) இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ) இடவெங்கும் ஆ) இடம் எங்கும் இ) இடமெங்கும் ஈ) இடம்மெங்கும் [விடை : இ) இடமெங்கும்]
|
சொல்லும் பொருளும் |
---|
● தீர்வன - நீங்குபவை
● திறத்தன - தன்மையுடையன ● உவசமம் - அடங்கி இருத்தல் ● கூற்றவா - பிரிவுகளாக ● நிழல்இகழும் - ஒளிபொருந்திய ● பூணாய் - அணிகலன்களைஅணிந்தவளே ● பேர்தற்கு - அகற்றுவதற்கு ● பிணி - துன்பம் ● திரியோகமருந்து - மூன்று யோகமருந்து ● ஓர்தல் - நல்லறிவு ● தெளிவு - நற்காட்சி ● பிறவார் - பிறக்கமாட்டார் ● முகில் - மேகம் ● கெடிகலங்கி - மிக வருந்தி ● சம்பிரமுடன் - முறையாக ● சேகரம் – கூட்டம் ● காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று ● வின்னம் - சேதம் ● வாகு – சரியாக ● காலன் – எமன் ● மெத்த – மிகவும் |
சீர்களை முறைப்படுத்தி எழுதுக. |
---|
● யாழ்கோடு அன்ன கொளல் களைகொடிது ● வினைபடு பாலால் செவ்விதுஆங்கு. விடை ● கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன ● வினைபடு பாலால் கொளல். |
minnal vega kanitham