Type Here to Get Search Results !

Day 19 New syllabus அடிப்படையில் 8th தமிழ் இயல் - 1

0
பாரதியார்
நூல் வெளி
• கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார்
• இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
• கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
• சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

மரபுத் தமிழ்
தெரிந்து தெளிவோம்

இயற்கையைப் போற்றுதல் தமிழர் ---------- .
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
[விடை : அ) மரபு]
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
(எ.கா.) காரம் கரையும்.
விடை
● ஆந்தை அலறும்
● கிளி பேசும்
● குயில் கூவும்
● கூகை குழறும்
● கோழி கொக்கரிக்கும்
● சேவல் கூவும்
● புறா குனுகும்
● மயில் அகவும்
● வண்டு முரலும்

மரபுத் தொடர்கள்
தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.
பறவைகளின் ஒலிமரபு
● ஆந்தை அலறும்
● காகம் கரையும்
● சேவல் கூவும்
● குயில் கூவும்
● கோழி கொக்கரிக்கும்
● புறா குனுகும்
● மயில் அகவும்
● கிளி பேசும்
● கூகை குழறும்
தொகை மரபு
● மக்கள் கூட்டம்
● ஆநிரை
● ஆட்டு மந்தை
வினைமரபு
● சோறு உண்
● தண்ணீர் குடி
● பூக் கொய்
● முறுக்குத் தின்
● கூடை முடை
● இலை பறி
● சுவர் எழுப்பு
● பால் பருகு
● பானை வனை
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி ………………………. (கூவும் / கொக்கரிக்கும்)
2. பால் …………………….. (குடி / பருகு)
3. சோறு ……………………… (தின்/ உண்)
4. பூ ………………………. (கொய் / பறி)
5. ஆ ……………………. (நிரை / மந்தை )
விடை
1. கொக்கரிக்கும்
2. பருகு
3. உண்
4. கொய்
5. நிரை
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள், அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
விடை
சேவல் கூவும் சத்தம் கேட்டுக்கயல் கண்விழித்தாள். பூக்கொய்ய நேரமாகிவிட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

ஒருபொருள் தரும் பல சொற்கள்
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக. விடை
நிலம் – தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி. நெருப்பு,
தீ – கொள்ளி, அக்கினி, கனல், அனல்.
நீர் – தண்ணீர், வெள்ளம், புனல். வளி
வளி – காற்று, வாயு, தென்றல், புயல்.
விசும்பு – ஆகாயம், வானம், விண்.
ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக.
(எ.கா.) அணி பல அணிகளை அணிந்த வீரர்கள், அணிஅணியாய்ச் சென்றனர்.
படி , திங்கள் , ஆறு
விடை
படி : படித்துக்கொண்டிருந்த மாலதி, மாடு கறந்த ஒரு படிப்பாலை எடுத்துக் கொண்டு, படியில் ஏறிச் சென்று தாயிடம் கொடுத்தாள்.
திங்கள் : சித்திரைத் திங்களில், முதல் திங்கள் அன்று, இரவில் திங்களைப் பார்ப்பது நல்லது.
ஆறு : ஆறுமுகம், காலையில் துவைப்பதற்காக ஆறு துணிகளை எடுத்துக்கொண்டு காவேரி ஆற்றுக்குச் சென்றான்.

சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.
2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
3. வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
விடை
ஒழுங்குபடுத்திய தொடர் :
1. வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்.
2. உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
3. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
4. உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
5. தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது.

அகரவரிசைப்படுத்துக.
எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.
விடை
அகர வரிசை: அழகுணர்ச்சி, ஆரம் நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஔகாரம்

சொல்லும் பொருளும்
1. விசும்பு – வானம்
2. மயக்கம் – கலவை
3. இருதிணை – உயர்திணை, அஃறிணை
4. வழா அமை – தவறாமை
5. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. மரபு – வழக்கம்
7. திரிதல் – மாறுபடுதல்
8. செய்யுள் – பாட்டு
9. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)வானம்
10. நிரந்தரம் - காலம் முழுமையும்
11. வைப்பு - நிலப்பகுதி
12. சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்
13. வண்மொழி - வளமிக்கமொழி
14. இசை - புகழ்
15. தொல்லை - பழமை, துன்பம்
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
[விடை : அ) வைப்பு]

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
[விடை : ஆ) என்று + என்றும்]
2. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
[விடை : இ) வானம் + அளந்தது]
3. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
[விடை : இ) அறிந்ததனைத்தும்]
4. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வானம்அறிந்து
ஆ) வான்அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
[விடை : இ) வானமறிந்த]
5. 'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
[விடை : அ) இரண்டு + திணை]
6. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
[விடை : ஆ) ஐந்து + பால்]

கலைச்சொல் அறிவோம்.
1. ஒலிபிறப்பியல் – Articulatory phonetics
2. மெய்யொலி – Consonant
3. மூக்கொலி – Nasal consonant sound
4. கல்வெட்டு – Epigraph
5. உயிரொலி – Vowel
6. அகராதியியல் – Lexicography 7. ஒலியன் – Phoneme
8. சித்திர எழுத்து – Pictograph

கருத்துரையிடுக

0 கருத்துகள்