Type Here to Get Search Results !

Day 13 New syllabus அடிப்படையில் 7th தமிழ் இயல் - 4

0
உருத்திரங் கண்ணனார்
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை*......

- கடியலூர் உருத்திரங் கண்ணனார்
நூல் வெளி
• கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
• இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
• இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
• பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
• இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
• வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.
நூல் வெளி
மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே.
மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
• இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
• இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

காலம்
காலம் மூன்று வகைப்படும் :
1. இறந்தகாலம்
2. நிகழ்காலம்
3. எதிர்காலம்

1. இறந்தகாலம் : நடந்த செயலைக்குறிப்பது இறந்தகாலம்.
சான்று : பார்த்தான், ஆடினாள்.
2. நிகழ்காலம் : நடக்கும் செயல்களைக் குறிப்பது நிகழ்காலம்.
சான்று : பார்க்கிறான், ஆடுகின்றாள்.
3. எதிர்காலம் : நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர்காலம்.
சான்று : காண்பான், ஆடுவாள்.
கட்டங்களை நிரப்புக.

பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.
விடை : அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்.
2. கண்மணி நாளை பாடம் படித்தாள்.
விடை : கண்மணி நாளை பாடம் படிப்பாள்.
3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்.
விடை : மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது.
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
விடை : ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்துவார்.
5. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் செல்கிறோம்.
விடை : நாங்கள் நேற்றுக் கடற்கரைக்குச் சென்றோம்.

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்
1) ‘பெருங்கடல்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பெரு + கடல்
ஆ) பெருமை + கடல்
இ) பெரிய + கடல்
ஈ) பெருங் + கடல்
[விடை : ஆ. பெருமை + கடல் ]

2) இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது.
அ) இன்றுஆகி
ஆ) இன்றிஆகி
இ) இன்றாகி
ஈ) இன்றாஆகி
[விடை : இ. இன்றாகி ]

கலைச்சொல் அறிவோம்
கலங்கரை விளக்கம் - Light house
பெருங்கடல் - Ocean
கப்பல் தொழில் நுட்பம் - Marine technology
கடல்வாழ் உயிரினம் - Marine creature
நீர் மூழ்கிக் கப்பல் - Submarine
துறைமுகம் - Harbour
புயல் - Storm
மாலுமி - Sailor
நங்கூரம் - Anchor
கப்பல் தளம் - Shipyard

சொல்லும் பொருளும்
மதலை - தூண்
ஞெகிழி - தீச்சுடர்
அழுவம் - கடல்
வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
சென்னி - உச்சி
உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு
கரையும் - அழைக்கும்
உரவுநீர் அழுவம் - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
ஈ) மலை
[விடை : இ. கடல்]

தூண் என்னும் பொருள் தரும் சொல்
அ) ஞெகிழி
ஆ) சென்னி
இ) ஏணி
ஈ) மதலை
[விடை : ஈ. மதலை]

உரு - அழகு
போழ - பிளக்க
வங்கூழ் - காற்று
நீகான் - நாவாய் ஓட்டுபவன்
வங்கம் - கப்பல்
எல் - பகல்
கோடு உயர் - கரை உயர்ந்த
மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
இயற்கை வங்கூழ் ஆட்ட - அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் --------
அ) நிலம்
ஆ) நீர்
இ) காற்று
ஈ) நெருப்பு
[விடை : இ. காற்று ]

புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது
அ) காற்று
ஆ) நாவாய்
இ) கடல்
ஈ) மணல்
[ விடை : இ. கடல் ]

பொருத்துக.
வினா :
1. வங்கம் - பகல்
2. நீகான் - கப்பல்
3. எல் - கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி - நாவாய் ஓட்டுபவன்
விடை :
1. வங்கம் - கப்பல்
2. நீகான் - நாவாய் ஓட்டுபவன்
3. எல் - பகல்
4. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்