நாலடியார் (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 2) |
---|
நாலடியார் - சமணமுனிவர்
நூல்குறிப்பு • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். • இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது. • அறக்கருத்துகளைக் கூறுவது. • 'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. • இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம் • சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். • பத்துப்பாட்டில் பத்துநூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள். • இவற்றை, 'மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர். • சங்கநூல்களுக்குப்பின் தோன்றியநூல்களின் தொகுப்பு, 'பதினெண்கீழ்க்கணக்கு' என வழங்கப்படுகிறது. • இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன. • பதினெண் என்றால், பதினெட்டு என்பது பொருள். • இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர். • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே. |
நாலடியார் (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 2) |
---|
நூல்வெளி
• நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். • பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. • இது நானூறு வெண்பாக்களால் ஆனது. • நாலடி நானூறு, வேளாண் வேதம் என அழைக்கப்ட்டது. • திருக்குறளை போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் பகுப்புகளை கொண்டது. • இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை “நாளும் இரண்டும் சொல்லும் சொல்லுக்குறுதி” என்னும் தொடர் மூலம் அறியலாம். |
நான்மணிக்கடிகை (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 3) |
---|
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
ஆசிரியர் குறிப்பு: • நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார். • விளம்பி என்பது ஊர்ப்பெயர்; • நாகனார் என்பது புலவரின் இயற்பெயர். நூல் குறிப்பு : • நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள். • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள். • ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது. |
பழமொழி நானூறு (6th தமிழ் பழைய புத்தகம் இயல் - 4) |
---|
ஆசிரியர் குறிப்பு
• இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார். • முன்றுறை என்பது ஊர்ப்பெயர். • அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். • இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம். நூல் குறிப்பு • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. • நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது. • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது. • இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது. • இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள். |
பழமொழி நானூறு (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 7) |
---|
நூல்வெளி
• பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். • இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். • பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது. • பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • இது நானூறு பாடல்களைக் கொண்டது. • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. |
முதுமொழிக்காஞ்சி (7th தமிழ் புதிய புத்தகம் இயல் - 2) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• பெயர்: மதுரை கூடலூர் கிழார் • பிறந்த ஊர்: கூடலூர் • சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள். • காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர். நூல் குறிப்பு : • முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று. • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான • இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. • இந்நூல், அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது. • இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன. • ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன. • இந்நூல் நூறு பாடல்களால் ஆனது. நூல் பயன்: • முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும். |
minnal vega kanitham