மரூஉ (7th New Tamil Book) |
---|
• நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை.
• தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம். • இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும். • (எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு தெரிந்து தெளிவோம் • வாயில்-வாசல் • இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும். • வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும். |
• எந்தை (என் தந்தை என்பதன் மரூஉ)
• போது (பொழுது என்பதன் மரூஉ)
• எம்பி (என் தம்பி என்பதன் மரூஉ)
• சோணாடு (சோழநாடு என்பதன் மரூஉ)
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக. (10th New Tamil Book) |
---|
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, உதகமண்டலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம், திருநெல்வேலி, மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை
எ.கா. • தஞ்சாவூர் - தஞ்சை • புதுக்கோட்டை - புதுகை • திருச்சிராப்பள்ளி - திருச்சி • உதகமண்டலம் - உதகை • கோயம்புத்தூர் - கோவை • நாகப்பட்டினம் - நாகை • புதுச்சேரி - புதுவை • கும்பகோணம் - குடந்தை • திருநெல்வேலி - நெல்லை • மன்னார்குடி - மன்னை • மயிலாப்பூர் - மயிலை • சைதாப்பேட்டை - சைதை |
• நுந்தை (நும் தந்தை என்பதன் மரூஉ)
minnal vega kanitham