இன எழுத்துகள் |
---|
Shortcut
• சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. • இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும். • ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். • சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும். (எ.கா.) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல் இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும். • மெய்யெழுத்துகனைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. • உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். • குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். • ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும். • சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. • அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும். (எ.கா) ஓஒதல், தூஉம், தழீஇ • தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை |
Book Back |
---|
இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை வட்டமிடுங்கள்.
கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை, வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள், கம்பனம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய் விடை கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை எடுத்து எழுதுங்கள். சங்கு, நுங்கு, பிஞ்சு, வஞ்சம், பண்டம், சுண்டல், வண்டி, பந்தயம்,பத்து, கற்கண்டு, தென்றல், நன்று விடை 1. சங்கு – ங்கு 2. நுங்கு – ங்கு 3. பிஞ்சு – ஞ்சு 4. வஞ்சம் – ஞ்ச 5. பட்டணம் – ட்ட 6. சுண்டல் – ண்ட 7. வண்டி – ண்டி 8. பந்தயம் – ந்த 9. பந்து – ந்து 10. கற்கண்டு – ண்டு 11. தென்றல் – ன்ற 12. நன்று – ன்று |
BOOK BACK |
---|
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது? அ) மஞ்சள் ஆ) வந்தான் இ) கல்வி ஈ) தம்பி [விடை : இ) கல்வி] 2. தவறான சொல்லை வட்டமிடுக. அ) கண்டான் ஆ) வென்ரான் இ) நண்டு ஈ) வண்டு [விடை : ஆ) வென்ரான்] பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக தெண்றல் – தென்றல் கன்டம் – கண்டம் நன்ரி – நன்றி மன்டபம் – மண்டபம் |
Old Questions |
---|
தவறான சொல்லை கண்டறிக. [6th இன எழுத்துக்கள் Book Back] (Madras High Court Exam 2021) a. கண்டான் b. வென்ரான் c. நண்டு d. வண்டு தவறான சொல்லை வட்டமிடுக. [6th New Book Back இன எழுத்துகள்] (2022 TNTET Paper -1) (A) நண்டு (B) கண்டான் (C) வென்ரான் (D) வண்டு இனவெழுத்து இல்லாத தமிழெழுத்து : [6th New இன எழுத்துக்கள்] (2022 TNTET Paper -1) (A) மெய்யெழுத்து (B) ஆய்த எழுத்து. (C) உயிரெழுத்து (D) உயிர் மெய்யெழுத்து கீழ்க்கண்டவற்றுள் மெல்லினத்திற்கான இனவெழுத்து இடம் பெறாத சொல் எது? (6th New Tamil Book Back இன எழுத்துகள்) (2023 TNTET Paper -2) (A) மஞ்சள் (B) திங்கள் (C) கல்வி (D) தென்றல் |
minnal vega kanitham