Type Here to Get Search Results !

Day 4 New syllabus அடிப்படையில் 6th தமிழ் இயல் - 4

0
மூதுரை
நூல்வெளி
• இந்நூலின் ஆசிரியர் ஒளவையார்.
• இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
• மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள் சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
• இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
நூல்வெளி
• எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
• திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

Book Back பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
1) இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -
அ) இடம் + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
இ) இட + எல்லாம்
ஈ) இட + மெல்லாம்
[விடை : ஆ) இடம் + எல்லாம்] 
2) மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற
[விடை : ஆ) மாசு + அற]
3) குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) குற்றமில்லாதவர்
ஆ) குற்றம்இல்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஈ) குற்றம் அல்லாதவர்
[விடை : அ) குற்றமில்லாதவர்]
4) சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சிறப்புஉடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார்
ஈ) சிறப்பிடையார்
[விடை : ஆ) சிறப்புடையார்]
5) கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
[விடை : இ) கை + பொருள்]
6) மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
[விடை : ஆ) மானமில்லா]
7) பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பசி + இன்றி
ஆ) பசி + யின்றி
இ) பசு + இன்றி
ஈ) பசு + யின்றி
[விடை : அ) பசி + இன்றி]
8) படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) படி + அறிவு
ஆ) படிப்பு + அறிவு
இ) படி + வறிவு
ஈ) படிப்பு + வறிவு
[விடை : ஆ) படிப்பு + அறிவு]
9) காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) காட்டாறு
ஆ) காடாறு
இ) காட்டு ஆறு
ஈ) காடுஆறு
[விடை : அ) காட்டாறு]

கலைச்சொல் அறிவோம்
1. கல்வி – Education
2. தொடக்கப் பள்ளி – Primary School
3. மேல்நிலைப் பள்ளி – Higher Secondary School
4. நூலகம் – Library
5. மின்படிக்கட்டு – Escalator
6. மின்தூக்கி – Lift
7. மின்னஞ்சல் – E – Mail
8. குறுந்தகடு – Compact Disk (CD)
9. மின் நூலகம் – E – Library
10. மின்நூல் – E – Books
11. மின் இதழ்கள் – E – Magazine
படத்தொகுப்பு - Album

சொல்லும் பொருளும்
• மாசற - குற்றம் இல்லாமல்
• சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்தால்
• தேசம் – நாடு
• தூற்றும்படி - இகழும்படி
• மூத்தோர் - பெரியோர்
• மேதைகள் - அறிஞர்கள்
• மாற்றார் - மற்றவர்
• நெறி - வழி
• வற்றாமல் – குறையாமல்
1) "மன்னன்" சொல்லுக்கு தமிழில் வழங்கும் வேறு பெயர்
அ) கோ
ஆ) அறிஞன்
இ) சான்றோன்
ஈ) பெரியன்
விடை: அ) கோ
2) "நெறி" என்னும் சொல் தரும் பொருள்
அ) வழி
ஆ) பாடு
இ) சேவை
ஈ) உறுதி
விடை: அ) வழி

புதிய சொற்களை உருவாக்குங்கள்.
'கல்விக்கண் திறந்த காமராசர்' இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்திப் புதிய சொற்களை உருவாக்குங்கள். (எ.கா.) கண்
விடை
1. கல்வி
2. கவி
3. கதி
4. ராசர்
5. விண்
6. திற
7. கா
8. வில்
9. கல்
10. திறந்த

முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
1. முளையிலே விளையும் தெரியும் பயிர்
விடை - விளையும் பயிர் முளையிலே தெரியும்
2. ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை
விடை - கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.
இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள். (நூல்,மாலை,ஆறு,படி)
(எ.கா.) ஆடை தைக்க உதவுவது நூல், மூதுரை அற நூல்


விடை :
1. மாலை –
i) திருமாலுக்கு அணிவிப்பது துளசி மாலை.
ii) மாலை வெயில் உடலுக்கு நல்லது.
2. ஆறு –
i) சுவைகள் மொத்தம் ஆறு.
iI) வைகையாற்றின் துணையாறுகளுள் ஒன்று மஞ்சளாறு.
3. படி –
i) நூலை எடுத்துப் படி.
ii) மேலே ஏறுவதற்குப் பயன்படுவது படி.
பின்வரும் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குங்கள்.
விடை

(i) ஆசிரியர் கவிதை எழுதுகிறார்.
(ii) மாணவன் கவிதை எழுதுகிறான்.
(iii) ஆசிரியர் பாடம் படிக்கிறார்.
(iv) மாணவன் பாடம் படிக்கிறான்.
(v) ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்.

பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்.
பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும். காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். "யாரைப் பார்க்க வந்தீங்க?" என்று அன்புடன் வினவினார். "எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்..." என்று சிறுமி கூறி முடிப்பதற்குள், "அம்மா அனுப்பி விட்டாரா?" என்று காமராசர் கேட்டார். "இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க" என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். "ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசிதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க' என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்
 அ) பெற்றோர்
ஆ) சிறுவன், சிறுமி
 இ) மக்கள்
 ஈ) ஆசிரியர்கள்
விடை : ஆ) சிறுவன், சிறுமி

 2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
 அ) ஏழ்மை
 ஆ) நேர்மை
 இ) உழைப்பு
 ஈ) கல்லாமை
 விடை : ஆ) நேர்மை

 3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம்_____

விடை நெகிழ்ந்தார்
 
4. சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?

 விடை சிறுவனும் சிறுமியும் தன் அண்ணனுக்குத் தேர்வுக்குக் கட்டணம் கட்டுவதற்குப் பணம் இல்லாததால் பண உதவி கேட்டு காமராசரின் வீட்டிற்கு வந்தனர்.

 5. காமராசர் செய்த உதவி யாது?
 விடை
காமராசர் ஏழை மாணவன் ஒருவனுக்குத் தேர்வுக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.

இன எழுத்துகள்
Shortcut



• சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு.
• இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
• ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.
• சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
(எ.கா.) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல்
இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.
• மெய்யெழுத்துகனைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
• உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
• குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும்.
• ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.
• சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை.
• அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
(எ.கா) ஓஒதல், தூஉம், தழீஇ
• தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை

Book Back
இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை வட்டமிடுங்கள்.
கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை,
வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள்,
கம்பனம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்
விடை

கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை எடுத்து எழுதுங்கள்.
சங்கு, நுங்கு, பிஞ்சு, வஞ்சம், பண்டம், சுண்டல், வண்டி, பந்தயம்,பத்து, கற்கண்டு, தென்றல், நன்று
விடை
1. சங்கு – ங்கு
2. நுங்கு – ங்கு
3. பிஞ்சு – ஞ்சு
4. வஞ்சம் – ஞ்ச
5. பட்டணம் – ட்ட
6. சுண்டல் – ண்ட
7. வண்டி – ண்டி
8. பந்தயம் – ந்த
9. பந்து – ந்து
10. கற்கண்டு – ண்டு
11. தென்றல் – ன்ற
12. நன்று – ன்று

BOOK BACK
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான்
இ) கல்வி
ஈ) தம்பி
[விடை : இ) கல்வி]
2. தவறான சொல்லை வட்டமிடுக.
அ) கண்டான்
ஆ) வென்ரான்
இ) நண்டு
ஈ) வண்டு
[விடை : ஆ) வென்ரான்]
பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக
தெண்றல் – தென்றல்
கன்டம் – கண்டம்
நன்ரி – நன்றி
மன்டபம் – மண்டபம்

Old Questions




தவறான சொல்லை கண்டறிக. [6th இன எழுத்துக்கள் Book Back] (Madras High Court Exam 2021)
a. கண்டான்
b. வென்ரான்
c. நண்டு
d. வண்டு
தவறான சொல்லை வட்டமிடுக. [6th New Book Back இன எழுத்துகள்] (2022 TNTET Paper -1)
(A) நண்டு
(B) கண்டான்
(C) வென்ரான்
(D) வண்டு
இனவெழுத்து இல்லாத தமிழெழுத்து : [6th New இன எழுத்துக்கள்] (2022 TNTET Paper -1)
(A) மெய்யெழுத்து
(B) ஆய்த எழுத்து.
(C) உயிரெழுத்து
(D) உயிர் மெய்யெழுத்து
கீழ்க்கண்டவற்றுள் மெல்லினத்திற்கான இனவெழுத்து இடம் பெறாத சொல் எது? (6th New Tamil Book Back இன எழுத்துகள்) (2023 TNTET Paper -2)
(A) மஞ்சள்
(B) திங்கள்
(C) கல்வி
(D) தென்றல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்