Type Here to Get Search Results !

6th தமிழ் பழைய புத்தகம் இயல் 5, 6

0
6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 5
தந்தை பெரியார் [6th Old Tamil Book இளமையில் பெரியார் கேட்ட வினா]
1. ஈ.வெ.ரா பெரியார் அவர்களின் பெற்றோர் பெயர்? வெங்கட்டப்பர் - சின்னத்தாயம்மாள்
2. ஈ.வெ.ரா பெரியார் அவர்களின் ஊர்? ஈரோடு
3. தந்தை பெரியார் - அவர்களின் காலம்? 17.09.1879 முதல் 24.12.1973 வரை
4. "பகுத்தறிவாளர் சங்கத்தை" அமைத்தவர் யார்? பெரியார்
5. இளமையிலே பெரியார் ________ என்பவரின் தொண்டரானார்? காந்தி
6. "வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படுபவர் யார்? பெரியார்
7. பகுத்தறிவு என்ற நாளேட்டை _____தொடங்கினார்? பெரியார்
8. ______ தம் கொள்கைகளுக்காக குடியரசு, விடுதலை என்ற இரு இதழ்களை நடத்தினார்? பெரியார்
9. தட்சிண காந்தி என்று அழைக்கப்பட்ட ராஜாஜியுடன் சிறந்த நட்புக் கொண்டிருந்தார் யார்? பெரியார்
10. ______ இல் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி என்ற பெயரைத் “திராவிடர் கழகம்” எனப் பெயர் மாற்றம் செய்தார்? 27.08.1944
11. நடுவண் அரசு _______- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது? 1978
12. ________ ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் "யுனெஸ்கோ விருது" பெரியாருக்கு வழங்கப்பட்டது? 1970
13. பெரியார், தம் வாழ்நாளில் ________ நாள், 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சமுதாயத் தொண்டு ஆற்றினார்? 8600
14. "அறிவு" என்பது வளர்ந்துகொண்டே இருக்கும்; எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும் என்று கூறியவர்? பெரியார்
15. பெண்விடுதலைக்கு முதற்படியாகப் பெண்கள் எல்லாரும் கல்வி கற்க வேண்டும் என்பதனை ______- என்பவர் வலியுறுத்தினார்? பெரியார்
16. பெண்கள் மற்போர், குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். அரசுப்பணி, இராணுவம், காவல்துறை முதலியவற்றிலும் பெண்களைச் சேர்க்க வேண்டும் - என்று கூறியவர்? பெரியார்
17. குணத்திலும் அறிவிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபாடு இல்லை; இருவரும் நிகரானவர்களே என்பதனை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியவர்? பெரியார்
18. “உங்களுடைய பணி பல சமுதாய அதிசயங்களைச் செய்துள்ளது. மக்களுக்குப் புதிய பாதை கிடைத்துள்ளது. எனக்குத் தெரிந்தவரை வேறு எந்த சீர்திருத்தவாதியும் உங்களைப் போன்று வெற்றியைப் பெற்றதில்லை” என்றார் _____? சி.என். அண்ணாதுரை
19. பெரியார் “தமிழ்நாட்டின் ரூசோ” என்று பாராட்டியவர் _______ ஆவார்? சா.ஏ.ராமசாமி முதலியார்
20. “தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தங்களைச் செய்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்தவர் பெரியார்” என்றார் _____? கு.காமராசர்.
21. கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்; கள் இறக்குவதனைத் தடுப்பதற்காகத் தன்னுடைய தோப்பிலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தார். கதர் அணியவேண்டும் என்று பரப்புரை செய்தார். பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி - மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார் - இந்த கூற்று யாருடையது? பெரியார்
22. "கீழ்ச்சாதி - மேல்சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல, எல்லாருக்கும் கல்வி தேவை; எல்லாரும் கல்வி பெறுதல் வேண்டும் " - என்று கூறியவர் யார்? பெரியார்
23. 'மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதனை ஏற்கிறீர்கள். அதுபோல, மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும். ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்தல் வேண்டும். அவர்களால் செய்யவும் இயலும். பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்." - என்று கூறியவர் யார்? - என்று கூறியவர் யார்? பெரியார்
24. பொறுமை, அமைதி, பேணுந்திறன் முதலியன பெண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் சினம், வீரம், ஆளுந்திறன் முதலியன ஆண்களுக்கு மட்டுமே உரியவை எனவும் கூறுவதனை ஏற்க இயலாது. இப்படிக் கூறுவது பெண்களை ஆட்டுக்கும் ஆண்களைப் புலிக்கும் ஒப்பாகக் கூறுவதுபோல் அல்லவா உள்ளது. பெண்களுக்கும் துணிவு, வீரம், ஆளுந்திறன் முதலியன உண்டு என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அதுவே பெண் விடுதலை - என வீரமுழக்கமிட்டவர் யார்? பெரியார்

சித்தர் பாடல்
பாடல் குறிப்பு
• ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
• பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்.
• நம் பாடப்பகுதிப் பாடலின் ஆசிரியர் கடுவெளிச் சித்தர்.
• இவர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்; எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்.

6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 6
புறநானூறு
நூல் குறிப்பு
• புறநானூறு = புறம் + நான்கு + நூறு.
• எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
• இந்நூல், புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு.
• எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க நூல்களாம்.
• சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது.
• தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது.
ஆசிரியர் குறிப்பு
• ஒளவையார் சங்கப் புலவர்; அதியமானின் நண்பர்.
• அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்.
• சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர்.
• அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஔவையார்.
• சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திசூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர்; வேறு வேறானவர்.

கவிஞர் தாராபாரதி
ஆசிரியர் குறிப்பு:
• கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.
• ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
• புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் முதலியன இவர்தம் நூல்களுள் சில.
• இவர் வாழ்ந்த காலம் 26.02.1947 to 13.05.2000.

தேசியம் காத்த செம்மல்
1. தேசியம் காத்த செம்மல் எனப்பட்டவர் முத்துராமலிங்கர்.
2. தேசியம் காத்த செம்மல் என்று முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டியவர் திரு. வி. கா.
3. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் : பசும்பொன்.
4. முத்துராமலிங்த் தேவரின் பெற்றோர் : உக்கிரபாண்டிததேவர், இந்திராணி.
5. முத்துராமலிங்கத் தேவரின் ஆசிரியர் - குறைவற வாசித்தான் பிள்ளை.
6. தேவர் படித்த பள்ளிகள் கமுதி தொடக்கப்பள்ளி, பசுமலை உயர்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி.
7. இராமநாதபுறம் அரசு உயர்நிலைபள்ளியில் தேவரின் கல்வி தடைப்படக்காரணம்? பிளேக் நோய் பரவியமை.
8. முத்துராமலிங்கத் தேவர் எச்சட்டத்தை ஒழிக்கப் பாடுப்பட்டார்? குற்றப்பரம்பரைச்சட்டம்.
9. சாதியும் நிறமும் அரசியலுக்குமில்லை ஆன்மிகத்திற்க்குமில்லை எனக்கூறியவர் முத்துராமலிங்க தேவர்.
10. முத்துராமலிங்க தேவரின் அரசியல் வழிகாட்டி - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
11. வங்க சிங்கம் யார்? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
12. தமிழகத்தின் சிங்கம் யார்? முத்துராமலிங்கத்தேவர்.
13. வாய்பூட்டுச்சட்டம் போடப்பட்ட தென்னாட்டுத் தலைவர் முத்துராமலிங்கத்தேவர்.
14. வாய்பூட்டுச்சட்டம் போடப்பட்ட வடநாட்டுத் தலைவர் : திலகர்.
15. முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பு பெயர்கள் : தேசியம் காத்த தலைவர், வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க சண்டைமாருதம், இந்து புத்த சமய மேதை, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னர்.
16. தேர்தர் பிரச்சாரம் செய்யாமலே வெற்றிபெற்ற தலைவர் : முத்துராமலிங்கதேவர்.
17. முத்துராமலிங்கத்தேவர் இரு கண்களாக போற்றியவை : தெய்வீகம், தேசியம்.
18. வீரமில்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீண் என்றவர் : முத்துராமலிங்கத்தேவர்.
19. தேவரின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு : 1995.
20. முத்துராமலிங்கத்தேவர் தமது சொத்துக்கலில் எவ்வளவு பகுதியை மட்டும் தாமக்காக வைத்துக்கொண்டர்? 17 - ல் ஒரு பங்கை மட்டும்.
21. தன்னம்பிக்கை கொள்வதன் முதல்படி எது? தன்னை அறிவது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்