நூல்குறிப்பு |
---|
ஆசிரியர் குறிப்பு:
• நான்மணிக்கடிகை நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார். • விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர். நூல் குறிப்பு : • நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. • கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள். • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள். • ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது. |
6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 4
பழமொழி நானூறு |
---|
ஆசிரியர் குறிப்பு
• இந்நூலின் (பழமொழி நானூறு) ஆசிரியர் முன்றுறை அரையனார். • முன்றுறை என்பது ஊர்ப்பெயர். • அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். • இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம். நூல் குறிப்பு • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. • நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது. • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது. • இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது. • இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள். |
மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம் |
---|
• 1. ஜவகர்லால் நேரு அவர்கள் ______ ஆண்டு முதல் _____ ஆண்டுகள் வரை தம் மகளுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தார்? 1922 முதல் 1964 • 2. ஜவகர்லால் நேரு அவர்கள் எத்தனை ஆண்டுகள் தம் மகளுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தார்? 42 • 3. இந்திரா காந்தி அவர்கள் _______ கல்லூரியில் பயின்றார்? தாகூரின் விசுவபாரதி கல்லூரி • 4. விசுவபாரதி கல்லூரி எந்த மாநிலத்தல் உள்ளது? மேற்கு வங்கம் • 5. ஜவகர்லால் நேரு அவர்கள் தம் மகளுக்கு எந்த சிறையில் இருந்து கடிதங்கள் எழுதினார்? அல்மோரா சிறை • 6. அல்மோரா சிறை எந்த மாநிலத்தில் உள்ளது? உத்தராஞ்சல் • 7. இந்திரா காந்தி அவர்கள் _______ என்பவரின் உதவியுடன் படிக்க வேண்டிய பாடங்களை முடிவு செய்தார்? கிருபாளினி • 8. ஜவகர்லால் நேரு அவர்கள் படித்த பல்கலைக்கழகம்? கேம்ப்ரிட்ஜ் • 9. கேம்ப்ரிட்ஜ் - எந்த நாட்டிலுள்ள பல்கலைக்கழகம்? இங்கிலாந்து • 10. புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல் கூடாது. கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படிச் செய்தால், புத்தக வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது. வெறுப்பே உண்டாகும். - இந்த கூற்று யாருடையது? நேரு • 11. போரும் அமைதியும் என்ற நூலின் ஆசிரியர் யார்? டால்ஸ்டாய் • 12. நேருக்கு மிகவும் பிடிதமானவார் ஆங்கில சிந்தனையாளரும் கல்வியாளருனுமான? பெட்ராண்ட் ரஸ்ஸல். • 12. சாகுந்தலம் - என்ற நாடக நூலின் ஆசிரியர்? காளிதாசர் • 13. தனியொரு மனிதனின் பட்டறிவு மிகவும் குறுகியது. புத்தகங்களில் மனிதர்களின் ஏராளமான பட்டறிவுச் சிந்தனைகள் அடங்கி உள்ளன. அவற்றை வாசிக்கும்போது, நாம் வசிக்கும் சிறுமூலையிலிருந்து வெளியேறுகிறோம் - இந்த கூற்று யாருடையது? நேரு • கேம்பிரிட்ஜ் - இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம் • சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர் • மில்டன் - ஆங்கிலக் கவிஞர் • பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையா • காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர் • டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர் • பெர்னாட்சா - ஆங்கில நாடக ஆசிரியர் • பெட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாளர்; கல்வியாளர் • அல்மோரா சிறை - உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது. • கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர். |
minnal vega kanitham