Type Here to Get Search Results !

8th புதிய தமிழ் இயல் 3

1

 1.     பேர்தற்கு அரும்பணி நாட்டுகளை அப்பிணி திரதற்குடரிய நிறியோக மருத்துஇலைஎன்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - நீலகேசி

2.     நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை3

3.     பிறவித் துன்பங்களை நீக்கும் மூன்று மருந்துகள் - நல்லறிவு ,நற்காட்சி , நல்லொழுக்கம்

4.     சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல்  - நீலகேசி

5.     நீலகேசியானது கடவுள் வாழ்த்து நீங்கலாகப் எத்தனை சருக்கங்களைக் கொண்டது10

6.     நிலகேசியின் ஆசிரியர் - எவரும் இல்லை

7.     உடல்நலம் என்பது - பிணி இல்லாமல் வாழ்தல்

8.     இவையுண்டார்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுஇவை + யுண்டார்

9.     தாம்இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்தாமினி

10.   தருவரைச் சருக்கம் இடம்பெற்றுள்ள நூல் - நீலகேசி

11.   நோய் வந்தபின் தீர்க்க முயல்வதைவிட வருமுன் காப்பதேஅறிவுடைமை

12.   நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை – உடல் தூய்மைஉடற்பயிற்சிநல்லஉணவு

13.   உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - கவிமணி தேசிய விநாயகம்

14.   "நித்தம் நித்தம்என்ற சொல்லின் பொருள் - நாள்தோறும்

15.   'காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின்எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - கவிமணி தேசிய விநாயகம்

16.   பேணுவையேல் என்ற சொல்லின் பொருள் - பாதுகாத்தல்

17.   தேசிய விநாயகம் அவர்களின் சிறப்புப் பெயர் - கவிமணி

18.   கவிமணி தேசிய விநாயகம் குமரி மாவட்டம் எந்த ஊரில் பிறந்தார்தேரூர்

19.   கவிமணி தேசிய விநாயகம் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார் - 36

20.   கவிமணி தேசிய விநாயகம் இயற்றிய நூல்கள் - ஆசியஜோதிமருமக்கள் வழி மான்மியம்கதர் பிறந்த கதை

21.   கவிமணி தேசிய விநாயகத்தின் மொழிபெயர்ப்பு நூல் - உமர்கய்யாம் பாடல்

22.   "மலரும் மாலையும்” என்ற நூலின் ஆசிரியர் – கவிமணி

23.   காந்தியடிகள் - வையம் போற்ற வாழ்ந்தார்

24.   'நலமெல்லாம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுநலம் + எல்லாம்

25.   இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்இடமெங்கும்

26.   மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் - திருவள்ளுவர்

27.   பழந்தமிழர் அறிந்த மருத்துவமுறைகள் - மூலிகை மருத்துவம்,அறுவை மருத்துவம்மருந்தில்லா மருத்துவம்யோகம்

28.   உடலுக்கும்பிரபஞ்சத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்துஉடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கியவை – சாங்கியம்ஆசீவகம்

29.   "வேர்பாரு : தாழை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரேஎன்ற வரியை சொன்னவர்சித்தர்கள்

30.   சித்த மருத்துவத்தில் எதில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது – மூலிகைதாதுப்பொருள் , உலோகம்

31.   "நோய்நாடி நோய் முதல் நாடிஎன்று கூறியவர் - திருவள்ளுவர்

32.   நோய்க்கான காரணங்கள் – உணவுமாசு நிறைந்த சுற்றுச்சூழல்மன அழுத்தம்

33.   எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் - சர்க்கரை நோய்இரத்தக்கொதிப்பு

34.   நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகள் சில - சித்தமருத்துவம்ஆயுர்வேத மருத்துவம் , யுனானி மருத்துவம்அலோபதி மருத்துவம்

35.   நலமாக வாழ்வதற்கு எது அவசியம் - சரியான உணவுசரியான உடற்பயிற்சிசரியான தூக்கம்

36.   தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு - தாவரங்களை   பயன்படுத்தினர்

37.   தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது - உணவின் நீட்சியாகவே உள்ளது?

38.   உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்றுஇரத்தக் கொதிப்பு

39.   சமையலறையில் செலவிடும் நேரம் - நல்வாழ்வுக்காக செலவிடும் நேரமாகும்

40.   இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் - மனித மூளை

41.   மனித மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை - ட்ரில்லியன்

42.   மனித மூளையில் எத்தனை கோடி நியூரான்கள் உள்ளனபத்தாயிரம்

43.   மனித மூளையானது எத்தனை பகுதிகளைக் கொண்டதுமூன்று

44.   மூக்கு மற்றும் கண்ணின் முடிவு எங்குள்ளதுமுன் மூளை

45.   நம் உடலின் அசைவுகளையும்உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவதுசிறுமூளை

46.   மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு - 800 மில்லி குருதி தேவைப்படுகிறது

47.   மூளைஉடம்பின் எடையில் எத்தனை பங்கைச் கொண்டுள்ளது  - 1 / 50

48.   மூளையானது உடம்பிற்கு தேவைப்படும் உயிர்வளி மற்றும் குருதியில் எத்தனை பங்கை எடுத்துக்கொள்கிறது1/5

49.   இருமல்தும்மல்கொட்டாவிவாந்தி ஆகிய தன்னிச்சையான செயல்களுகளை செய்யும் உறுப்பு - முதுகுத் தண்டின் குறுக்கு இணைப்புகள்

50.   இடது பக்க மூளையின் வேலைகள் - பேசஎழுதகணத்திடதர்க்கரீதியில் சிந்திக்க

51.   இடது பக்க மூளை எவற்றையெல்லாம் பார்த்துக் கொள்கிறது - அறிவாற்றல்பிரச்சனைகளை அலசுதல்சதுரங்கம்

52.   மூளையின் எந்த பகுதியில் நாம் வடிவங்களை உணர்கிறோம்வலது பகுதி

53.   கவிதை எழுதுவதுபடம் போடுவதுநடனம் ஆடுவதுநடிப்பது போன்றகைய மூளையின் எந்த பகுதியில் நடைபெறுகிறதுவலது பகுதி

54.   மூளையின் வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளவர்கள் நடிகர்கள்பாடகர்கள்நடனக்கலைஞர்இசைக்கருவிகளைக் கையாளுபவர்கள்

55.   மூளையின் இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளவர்கள் – பட்டயக்கணக்கர்கணக்கு ஆசிரியர்இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்

56.   யாருக்கு முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டும் திறமை அதிகம்மனிதன்

57.   எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை மனநிலை மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்-90

58.   சராசரி மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை வருடங்கள் தூங்குகிறான் - 20

59.   மனிதன் வாழ்நாளில் எத்தனை லட்சம் கனவுகள் காண்கிறான்லட்சம்

60.   சுஜாதாவின் இயற்பெயர் - ரங்கராஜன்

61.   மின்னணுவாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப்பங்கு ஆற்றியவர் - சுஜாதா

62.   என் இனிய எந்திராமீண்டும் ஜினோ , ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் என்ற நூலை எழுதியவர் - சுஜாதா

63.   தூண்டில் கதைகள் என்ற நூலை எழுதியவர் – சுஜாதா

64.   பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்-  எச்சம்

65.   எச்சம் எத்தனை வகைப்படும் 2

66.   பெயரைக் கொண்டு முடியும் எச்சம் எனப்படும்பெயரெச்சம்

67.   பெயரெச்சம் எத்தனை வகைப்படும்2

68.   செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம்தெரிநிலை பெயரெச்சம்

69.   செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டால் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம்குறிப்பு பெயரெச்சம்

70.   வினையைக் கொண்டு முடியும் எச்சம்வினையெச்சம்

71.   வினைபோம் எத்தனை வகைப்படும் - 2

72.   செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம்தெரியலை வினையெச்சம்

73.   காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம் - குறிப்பு வினையெச்சம்

74.   ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது - முற்றெச்சம்

75.   முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் - எச்சம்

76.   குறிப்பு வினையெச்சம் -  காலத்தை வெளிப்படையாகக் காட்டாது?

77.   இலக்கணக்குறிப்பு தருக

           1.     படித்த மாணவன் - பெயரெச்சம்

           2.     படித்து முடித்தான் வினையெச்சம்

78.   மடை திறந்த வெள்ளம் போல - தடையின்றி மிகுதியாக

79.   உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படைத்தன்மை

80.   காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல - தற்செயல் நிகழ்வு

81.   கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போலஎதிர்பாராத நிகழ்வு

82.   பசு மரத்து ஆணி போல எளிதில் மனதில் பதிதல்

83.   விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்ற செயல்

84.   நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல - ஒற்றுமையின்மை

85.   பொருத்துக

           1.     தீர்வன - நீங்குபவை

           2.     உவசமயம் அடங்கி இருத்தல்

           3.     நிழல் இகழும் ஒளி பொருந்திய

           4.     போதற்கு - அகற்றுவதற்கு

86.   பொருத்துக

           1.     திரியோக மருந்து - மூன்று யோக மருந்து

           2.     தெளிவு நற்காட்சி

           3.     திறத்தன தன்மையுடையன

           4.     கூற்றவா பிரிவுகளாக

87.   பொருத்துக

           1.     பூணாய் - அணிகலன்களை அணிந்தவளே

           2.     பிணி - துன்பம்

           3.     ஓர்தல் நல்லறிவு

           4.     பிறவார் - பிறக்கமாட்டார்

88.   பொருத்துக

           1.     மட்டு அளவு

           2.     சுண்ட நன்கு

           3.     வையம் உலகம்

           4.     திட்டுமுட்டு தடுமாற்றம்

89.   பொருத்துக

           1.     நடந்து வினையெச்சம்

           2.     பேசிய பெயரெச்சம்

           3.     எடுத்தனன் உண்டான் முற்றெச்சம்

           4.     பெரிய குறிப்புப் பெயரெச்சம்

90.   பொருத்துக

           1.     நோய் Disease

           2.     மூலிகை Herbs

           3.     சிறுதானியம் - Millets

           4.     பட்டயக் கணக்கர் - Auditor

91.   பொருத்துக

           1.     பக்கவிளைவு - Side Effect

           2.     நுண்ணுயிர் முறி - Antibiotic

           3.     மரபணு - Gene

           4.     ஒவ்வாமை - Allergy


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham