Type Here to Get Search Results !

நூல் வெளி, தெரிந்து தெளிவோம் 7th தமிழ் இயல் 3 || Day 11 Test - 11B


நூல்வெளி
இயல் 3.1 புலி தங்கிய குகை (புறநானூறு)
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
• கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார்.
• இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.
• இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

நூல்வெளி
இயல் 3.2 பாஞ்சை வளம்
• கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன.
• அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
• நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

தெரிந்து தெளிவோம்
இயல் 3.3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்
தெரிந்து தெளிவோம்
• பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் முப்பதாம் நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகிறது.
• தமிழகச் சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
• சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
• இந்திய நாடளுமன்ற வளாகத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால் 1995 இல் தபால் தலை வெளியிடப்பட்டது.

தெரிந்து தெளிவோம்
முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள்
தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரவசன கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்தசமய மேதை.

தெரிந்து தெளிவோம்
• பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாள்கள் 20,075.
• சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாள்கள் 4000.
• தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்த தியாகச் செம்மல் முத்துராமலிங்கத்தேவர் ஆவார்.

நூல்வெளி
இயல் 3.4 கப்பலோட்டிய தமிழர் (இரா.பி.சேது)
• இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
• இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர். செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.
• இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
வ. உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
தெரிந்து தெளிவோம்
• 'சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால்.
• செத்த பிணம் உயிர்பெற்று எழும்.
புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்'
- சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று.

தெரிந்து தெளிவோம்
இயல் 3.5 வழக்கு
தெரிந்து தெளிவோம்
வாயில்-வாசல்
• இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும்.
• ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம்.
• இது இலக்கணப். போலியாகும்.
வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.
தெரிந்து தெளிவோம்
இப்படியும் கூறலாம்
• இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.
நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
• மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
• பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் குழூஉக்குறி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.