நூல்வெளி |
---|
இயல் 2.1 சிலப்பதிகாரம்
• சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். • இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. • இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர். • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். • இதுவே தமிழின் முதல் காப்பியம். • இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது. • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. • திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது. • அவ்வாழ்த்துப்பகுதி நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது. |
நூல்வெளி |
---|
இயல் 2.2 காணி நிலம் (பாரதியார்)
• இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். • அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். • எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார். • பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. |
தெரிந்து தெளிவோம். |
---|
இயல் 2.3 சிறகின் ஓசை
• தெரிந்து தெளிவோம் • கப்பல் பறவை சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird), இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது. • இந்தியாவின் பறவை மனிதர் • இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி. • தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். அதனால், அவர் 'இந்தியாவின் பறவை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். • பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். • தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fali of sparrow) என்று பெயரிட்டுள்ளார். • பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும். • உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் - 20 |
நூல்வெளி |
---|
இயல் 2.6 திருக்குறள்
● திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். ● வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு ● திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. ● பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. ● "திருக்குறளில் இல்லாததும் இல்லை. சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. ● திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. ● நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
ரொம்ப நன்றி அண்ணா... நான் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன் கொஞ்சம் கஷடாமா இருக்கு... இதுபோல் நீங்க தினமும் அனைத்து பாடங்களும் எடுங்க அண்ணா...
பதிலளிநீக்குஇது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
பதிலளிநீக்குSuper sir easily understand and memory also very. Easy. Sir so
பதிலளிநீக்குG. K test kudungasir
Super ji
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குAnna ithu Pola Tamil ilakkanum notes and test podunga Anna ilakkanam koncham kastama irukku please anna
பதிலளிநீக்குminnal vega kanitham